பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 39 தங்கியிருப்பவன் என்ற பொருளையும், தலைவன் என்ற பொருளையும் தருதல் அறியப்பட வேண்டும். அடுத்துள்ள அடி, வேகம் கெடுத்து ஆண்ட வேந்தன் அடி வெல்க (6) என்பதாகும். வேகம் என்ற சொல் முதன்முதலாக மணிவாசகரால் பயன்படுத்தப்படுகிறது. அறிவு, மனம் இரண்டும் மிகவேகமாக தொழிற்படக்கூடிய இரண்டு கருவிகள் ஆகும். பொறி, புலன்கள் என்பவை அறிவு, மனம் இவற்றின் துணை கொண்டு பணிபுரிகின்றன. பொறி புலன்களுக்கு உதவுகின்ற அதே நேரத்தில் அறிவு தானும் விளக்கம் பெற்றுக்கொள்கிறது. கற்கால மனிதனைவிட இன்று நாம் எல்லை காண முடியாத அளவுக்கு விஞ்ஞானத்தில் வளர்ந்துள்ளோம். ஆனால், மனத்தால் வளராத காரணத்தால் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்துக்கொள்கிறோம். மனம் அடங்குவதற்கு மனத்தின் வேகமே நேரடித் தடையாக உள்ளது. மனத்தை அடக்கமுயன்று ஒரு விநாடி நேரம் தியானத்தில் அமர்ந்தால் உண்மை விளங்கும். அந்த ஒரு விநாடியில் ஆயிரக் கணக்கான எண்ணங்கள் உள்ளே தோன்றுவதைக் காணலாம். புலன்கள்வழி மனப் பிரவர்த்தி பல திசைகளிலும் வேகமாகச் செல்வதை அடக்கினாலொழிய மன ஒருமைப்பாடு என்பது கிடைத்தற்கு அரியதாகும். பழங்காலத்தில் இந்தப் பொறிகளையும், மனத்தையும் அடக்குவதற்குச் சாதனமாக ஒரு இவர் கஞ்சா முதலியவற்றைப் பயன்படுத்தினர். இந்த நூற்றாண்டில் போதை மருந்துக்கு அடிமையாகிறவர்களும் இதே கருத்துடன்தான் அடிமையாகின்றனர். போதை மருந்தை உட்கொண்ட பின்பு பொறி, புலன்களும் மனமும் செயலிழக்க, ஒருவகையான செயற்கை அமைதி அவர்கட்குத் தோன்றுகிறது. அந்த அமைதிதான் தாங்கள்