பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. திருவாசகம் - சில சிந்தனைகள் பெறவேண்டிய பேறு என்று நினைத்துக் கொண்டு இவர்கள் ஏமாறுகின்றனர். இவற்றை அல்லாமல் பயிற்சிமூலம் புலன்களை அடக்கி மனத்தை ஒருமுகப் படுத்தும் வழியையும் பலர் கையாண்டனர். எந்த வழியாக இருப்பினும் இதிலுள்ள குறையை யாரும் அறிந்ததாகத் தெரியவில்லை. இவற்றை அடக்கினால்மட்டும் எவ்விதப் பயனும் விளைவதில்லை. மயக்க முற்றவர்கள், கோமாவில் (coma) இருப்பவர்கள் ஆகியவர்களுக்கும் மனம் செயலிழந்து நிற்கிறது. ஏதோ பொறி, புலன்களை அடக்கிவிட்டோம் என்று நினைப்பதால் பயனில்லை. இம்முயற்சி இன்று நேற்றுஅல்லாமல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூட இருந்தது என்பதை அறிய முடிகிறது. இதைத்தான் வள்ளுவப் பேராசான் ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு - (குறள்-354) என்று கூறிச்செல்கிறார். மனம் ஒருமைப்படுதல் ஐயுணர்வு பெறுவதற்குரிய வழியே தவிர, மெய்யுணர்வு இல்லாமல் மனத்தை ஒருமைப்படுத்துவது எவ்விதப் பயனையும் தராது என்பது குறளின் கருத்தாகும். இவற்றையெல்லாம் மனத்திற்கொண்டு மணிவாசகப் பெருந்தகை வேகம் கெடுத்தாண்டான் என்று கூறுகிறார். இறைவனை வேண்டி, அவன் அருள்வழி நின்று மனத்தை அடக்குதல் மெய்யுணர்வுக்கு வழியாகும். அதையே குறிப்பாகச் சொல்லும் முறையில் வேகம் கெடுத்து ஆண்ட என்றார். இறைவனை அடைய வேண்டுமானால் அதற்கு வேகம் கெட்டு மனம் ஒருமைப்பட வேண்டும். அவன் நம்மை ஆளவேண்டும். அவன் ஆட்கொண்டுவிட்டான் என்பது எப்படித் தெரியும் உள்ளே தோன்றும் மெய்யுணர்வு, மன் அமைதி, அதனால் ஏற்பட்ட ஆனந்தம் இவற்றைக் கொண்டுதான் அவன் ஆட்கொண்டுவிட்டான் என்பதை