பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 41 அறிய முடியும். இந்த நிலை வரும்போது அறுவகைக் குற்றம் முதலியன உள்ளே புக இடமேயில்லை. விருப்பு வெறுப்புகள் மாய்ந்துவிடுகின்றன. அந்த அனுபவத்தைப் பற்றி அபிராமிபட்டர் இதோ பாடுகிறார்; வருந்தாவகை என்மனத்தாமரையில் வந்துபுகுந்து இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப் பொருந்தாத ஒரு பொருள் இல்லை (அபி.அந்-90) எனவே, இறைவன் ஆட்கொண்ட பிறகு எந்த ஒரு பொருளின்மேலும் விருப்போ வெறுப்போ ஏற்படுவ தில்லை. அத்தகைய ஒரு மனநிலை கிட்டிவிட்டால் திருவருள் கைகூடிவிட்டது என்று உணர்ந்துகொள்ளலாம். இதனைக் கூறவந்த அடிகளார் வேந்தன்' என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? அதிலும் ஒரு குறிப்பு உள்ளது என்றே நினைக்கத் தோன்றுகிறது. உலக வாழ்க்கையில், வேந்தன் ஆணையை, ஏனென்று கேளாமல் கீழ்ப்படிவதே முறை என்று சொல்லப்படுகிறது. இந் நாட்டவரேயல்லாமல் எந்நாட்டவரும் ஏற்றுக் கொள்ளும் விதியாகும் இது. இதனை ஆங்கிலத்தில் Yours is to do and die And not to question why என்று சொல்கிறார்கள். சாதாரண அதிகாரத்தில் இருப்பவர்களுடைய ஆணையையே ஏனென்று கேளாமல் கீழ்ப் படிய வேண்டுமென்பது உலக நியதி. தம்முடைய அறிவினால் ஆராய்வதற்கோ, ஏன் இவ்வாறு செய்ய வேண்டுமென்று நினைப்பதற்கோ இடமில்லை என்பதை அறிவிக்கவே வேந்தன் என்ற சொல்லைப் பயன் படுத்துகிறார்.