பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 திருவாசகம் - சில சிந்தனைகள் நம்முடைய மனத்தின் வேகத்தைக் கெடுப்பதால் அவனுக்கு ஒன்றும் இலாபம் இல்லை. மருத்துவர் அறுவை மருத்துவம் செய்யும்போது அதனால் பயன்பெறுபவன் நோயாளியேதவிர மருத்துவன் அல்லன். அதுபோல் நம்முடைய வேகத்தைக் கெடுக்கிறான் என்று நினைந்து மன உளைச்சற்படாமல் அவன்வழி நிற்போமானால் கிடைக்கும் பேறு அளவிடற்கரியதாகும். திருவருள் பலத்தைப் பெறவேண்டுமானால் நம்முடைய அற்ப அறிவைக் கொண்டு வினாக்களை எழுப்பிக்கொண்டு அவதிப்படுவது பயனற்றதாகும். அவன் வேந்தன் என்ற கருத்துடன் கீழ்ப்படிதலே சிறப்புடையதாகும். இத்தனை கருத்தையும் உள்ளடக்கக்கூடியதாக ஆண்ட வேந்தன்' என்று உரைக்கிறார். பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க (7) பிஞ்ஞகன் என்ற சொல்லுக்குப் பிஞ்சம் என்ற ஒரு வகைச் சடையை உடையவன் என்பது பொருளாகும். இறைவனுடைய சடாபாரம் பிஞ்சம்' என்ற பெயருடைய கொண்டையாக உள்ளது. ஆதலால், அவன் அந்தப் பெயரைப் பெறுகிறான். பிறப்பை அறுப்பவன் அவனே ஆவான். அறுக்கும் என்ற வினைச்சொல்லுக்கு வினை முதலாக இருப்பவன் பிஞ்ஞகன் என்றுதான் சாதாரணமாகப் பொருள் கொள்வார்கள். ஆனால், ஆழ்ந்து நோக்கினால், இன்னும் ஒருபடி மேலே செல்கிறார் அடிகளார் என்பது தெளிவாகும். பிஞ்ஞகன் வடிவத்தில் தலை முதல் பல உறுப்புகள் இருப்பினும் அவையெல்லாம் பிறப்பை அறுக்க உதவுவதில்லை. அபய கரம் அஞ்சல்' என்று மனத்தில் திடத்தைத் தரலாம்; வரத கரம் வேண்டிய பொருளை அள்ளித் தரலாம்; கருணை திறைந்த அவனுடைய கண்கள் மன அமைதியைத் தரலாம்; ஊன்றிய திருவடிகூட உயிர்களின்