பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 43 ஆணவமலத்தை அடக்க உதவலாம். ஆனால். பிறப்பை அறுக்க இவ்வுறுப்புகள் உதவுவதில்லை. அவனுடைய தூக்கிய திருவடிதான் பிறப்பை அறுக்கப் பயன்படும் என்று நடராச வடிவத்திற்குப் பொருள் காண்பவர்கள் கூறுவார்கள். எனவே, அறுக்கும் பிஞ்ஞகன்' என்று கூறுவதைவிட, பிறப்பை அறுப்பது பெய் கழல்கள், என்று பொருள்கொள்வது பொருத்தமாக இருக்கும். புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க (8) புறத்தார் என்பதற்கு இறைவன் திருவருளில் ஈடுபடாமல், திருவடிக்கு ஆளாகாமல் இருப்பவர்கள் என்பது பொருளாகும். சேயோன் என்ற சொல்லுக்கு மிக நீண்ட துரத்தில் இருப்பவன் என்பது பொருளாகும். இறைவன் எல்லா உயிரினும் ஊடுருவி நிற்கின்றான் என்று இதுவரை கூறிவந்த அடிகளார். இப்போது அவன். "சேயோன் என்று கூறுவதன் நோக்கம் என்ன? ஆழ்ந்து நோக்கினால், எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாய் அவன் இருக்கிறான் என்பது உண்மை. ஆனால், அதனை அறியாத இந்த ஆன்மா அவனுக்கும் தனக்கும் இடையே உள்ள துரத்தை மும்மலங்கள் காரணமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, "சேயோன்' என்று சொல்வதன் உள் நுணுக்கம் அவன் சேயோனாகப் போய்விடவில்லை; நாம்தான் புறத்தே போய்விட்டோம் என்பதை விளக்குவதாகும். உலக இயலைப்பற்றிக்கொண்டு உழலும் மனித வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறார் அடிகளார். அவனோடு நெருங்கியிருப்பதற்குத் தடையாக உள்ளவை ஐந்து பொறிகளின் விளையாடல்கள்தான். இந்த ஐம்பொறிகளே அவனோடு ஒன்றவிடாமற் செய்கின்றன என்பதைத் திருஞானசம்பந்தப் பெருமான் திருவலிவலப் பதிகத்தில்,