பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 திருவாசகம் - சில சிந்தனைகள் ஆயமாய காயந்தன்னுள் ஐவர் நின்று ஒன்றல் ஒட்டார் மர்யமேயென்று அஞ்சுகின்றேன் வலிவலம் மேயவனே (திருமுறை :1-50-7) என்று கூறுகின்றார். ஒன்றல் ஒட்டார்’ என்ற தொடரைச் சிந்திக்க வேண்டும். ஒன்றியபோது திருவடி நிழலில் தங்கும் சிறப்பும், ஒன்றாதபோது புறத்தே போய்விடும் கொடுமையும் இப்பொறிகளால் நிகழ்கின்றன. இதனையே அடிகளார் ‘புறத்தார் என்று கூறுகிறார். கரம் குவிவார் உள் மகிழும் கோன் கழல்கள் வெல்க (9) இரண்டு கரங்களையும் ஒன்றாகச் சேர்த்து நெஞ்சுக்கு நேரே வைத்து வணங்குவதும், தலைக்குமேலே துரக்கி வணங்குவதும் மிகப் பழங்காலந்தொட்டே தமிழரிடையே இருந்துவரும் பழக்கமாகும். இதனையே நம்முடைய கருத்துப்படி கூறவேண்டுமானால் கரம் குவிப்பார் என்று சொல்லியிருக்க வேண்டும். குவிதலாகிய செயலைச் செய்கின்ற வினைமுதல் நாம்தானே. அவ்வாறு சொல்லாமல் 'கரம் குவிவார்’ என்று அடிகளார் கூறுவதன் நோக்கம் என்ன? இடர்க் கடலினின்று நீங்கிக் கரையேற வேண்டுமென்ற நினைவு வந்தவுடன் கரையேற்றக்கூடிய ஒருவனுடைய நினைவு தோன்றும். அந்த நினைவு தோன்றியவுடன் அவனைச் சரணமாக அடைவதற்குரிய ஒரே வழி மன ஒருமைப்பாட்டோடு கரங்களைக் குவிப்பதாகும். இந்த நினைவு ஆழமாகப் பதியப்பதியக் கரங்களைக் குவிக்க வேண்டுமென்ற எண்ணமோ, முயற்சியோ இல்லாமல் கரங்கள் தாமாகவே குவிந்துவிடுகின்றன. அடியார்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் கரங்கள் தாமே குவிவதுபற்றிப் பல இடங்களில் சொல்லப் பெற்றுள்ளது. மெய்ப்பொருள் நாயனாரின் அரண்மனைக் காவலர்கள் சிவவேடந்தாங்கிய முத்தநாதனைக் கண்டவுடன் என்ன நிகழ்ந்தது என்பதைச் சேக்கிழார் பெருமான் இதோ கூறுகிறார்: