பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 45 கடையுடைக் காவலாளர் கைதொழுது ஏற நின்றே (பெ.பு. மெய்ப்பொருள்-7) 'உள் மகிழும் என்ற இரண்டு சொற்களும் ஆழ்ந்து சிந்திப்பதற்குரியன. கரம் குவிப்பவர்களின் சித்தத்தின் உள்ளே நின்று, கரம் குவிப்பதைக் கண்டு மகிழ்கின்ற இறைவன்' என்று பொருள் கூறுபவர்களும் உண்டு. அவ்வாறு கொள்ளாமல் இந்த மகிழ்ச்சியைக் கரம் குவிப்பாருக்கே ஏற்றினால் என்ன என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மனத்தில் மகிழ்ச்சி தோன்ற வேண்டு மானால் அதற்குக் காரணம் புறத்தே இருக்கக் கூடிய பொருளாகவும் இருக்கலாம்; அகத்திலும் அக்காரணம் இருக்கலாம். உள்மகிழ்தல் என்று கூறுவதன் காரணம் என்ன? அப்படியானால் வெளி மகிழ்ச்சி என்று ஏதேனும் 'உண்டா? உண்டு என்று நினைப்பதில் தவறு இல்லை. மனம் புறமனம், அகமணம், ஆழ்மனம் என்று மூன்று நிலையில் இயங்குகிறது. இந்த ஆழ்மனம் சித்தத்தின் செயற்பாடாகும். சாதாரண நிலையில் ஆழ்மனத்தில் எத்தகைய ஒரு நிகழ்ச்சியும் எளிதில் தோன்றுவது இல்லை. உலகிடைக் கிடைக்கும் மகிழ்ச்சி புறமனத்தில் தோன்றும் மகிழ்ச்சியாகும். அது மிகச் சாதாரணமானது. நிலை யில்லாதது. இங்கு அடிகளார் பயன்படுத்தும் மகிழும்’ என்ற சொல்லுக்கு உண்மையான பொருள் ஆனந்தம் என்பதாகும். கரம் குவிந்தவுடன் உள்ளே ஆனந்தம் ஏற்படுகிறது. இந்த ஆனந்தம் புறப்பொருள்களாலோ அல்லது நம்முடைய கற்பனையினாலோ அல்லது பொறிபுலன்களின் வழியிலோ கிடைப்பது அன்று. ஆகவேதான், உள் மகிழும் என்று கூறினார். கரம் குவிவார் உள் மகிழ்ச்சி என்றால் கரம் குவிதலாகிய செயல், உள்ளே ஆனந்தத்தை உண்டாக்குகின்றது. இவ்வாறு பொருள் கூறுவது ஓரளவு இலக்கண வரம்பைக் கடந்து இருப்பதாயினும் இப்பொருள் கூறுவதால் தவறு இல்லையென்றே தோன்றுகிறது.