பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 திருவாசகம் - சில சிந்தனைகள் இவ்வடியில் ஒரு தனிச்சிறப்புக் காணப்படுகிறது. உலக வாழ்க்கையில் பெரும்பாலான புறச்செயல்கள் அகத்தில் (ஆழ் மனத்தில் எவ்வித மாறுபாட்டையும் உண்டாக்குவ தில்லை. காரணம், புறச்செயல்கள் எவ்வித உள்ளிடுமின்றி வாலாயமாக பழக்கம் காரணமாக நடைபெறுவதால் மனத்தில் எவ்வித மாற்றத்தையும் உண்டாக்குவதில்லை. ஆனால், இங்கு ஆழ்மனத்தில் ஆனந்தம் உண்டாகிறது என்றால் கரம் குவிதலுக்கும் இதற்குமுள்ள தொடர்பை அறியவேண்டும். ஆன்மாக்களின் உள்ளேநின்று இறைவன் மகிழ்கிறான் என்ற பொருள் ஏற்புடையதாக இல்லை. எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற ஒருவன் மகிழ்கிறான் என்று சொல்வதும் பொருந்துமாறு இல்லை. எனவேதான், மேலே கூறிய முறையில் இங்கு பொருள் கொள்ளப் படுகிறது. சிரம் குவிவார் ஒங்குவிக்கும் சிரோன் கழல் வெல்க (10) கரம் குவிதல் பொதுவாக நெஞ்சுக்கு நேரே குவிதலாகும். சிரம் குவிவார் என்று கூறியதன் விளக்கம், நெஞ்சுக்கு நேரே குவிதலையோ, நெற்றிக்கு நேரே குவிதலையோ அல்லாமல் தலைக்கு மேலே குவிதலைக் குறிப்பதாகும். இதனுடைய அடிப்படையை சற்றுச் சிந்திக்க வேண்டும். நெஞ்சுக்கு நேரே கைகளைக் குவித்தலும், நெற்றிக்கு நேரே-ஆக்ஞா சக்கரத்திற்கு நேரேகுவித்தலும், தலைக்குமேலே குவித்தலும் ஆகிய மூன்று முறைகள் உண்டு. உலக இயலில் நாம் ஒருவரை ஒருவர் வணங்கும்போது நெஞ்சுக்கு நேரே கையைக் குவித்து வண்ங்குகிறோம். பெரியவர்கள், ஞானிகள் ஆகியவர்களைக் காணும்போது ւյ(Ա;6ն மத்தியில் கைகளைக் குவித்து வணங்குதல் ஒரு முறையாகும். தலைக்கு மேலே கைகளைக் குவித்து வணங்குதல் இறைவனைப் போற்றமட்டுமே உரியதாகும். உலகியல்