பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 47 முறையிற் பார்த்தாலும் தலைக்கு மேலே கைகளைத் தூக்குகின்றவன் தன்னால் ஒன்றும் முடியாது என்பதை அறிவிப்பதற்கு இதனைப் பயன்படுத்துகின்றான். நீரில் மூழ்குபவன் கைகளை மேலே தூக்குவதன் காரணம், தன்னால் இனி மீள முடியாது என்பதை உணர்ந்ததே யாகும். ஆகவே, பிறர் உதவியை நாடும்போது கையை மேலே துரக்குதலையே இன்றும் காண்கிறோம். பந்தங்களிலிருந்து மீள முடியாது என்பதை உணர்ந்த ஆன்மா இறைவனிடம் சரணாகதி அடைந்து, அந்தச் சரணாகதி அடைந்தததை மனத்தால் மட்டுமன்றி, உடலாலும் காட்டுவதற்குரிய அறிகுறிதான் கைகளை மேலே தூக்குவதாகும். இந்த நிலையில்தான் இறைவன் ஆட்கொள்ள ஓடோடி வருகிறான் என்பதை மகாபாரத நிகழ்ச்சி ஒன்றால் அறிந்துகொள்ள முடியும். துச்சாதனன் துகில் உரியத் தொடங்கியபோது, பெண்களுக்குரிய இயற்கையோடு திரொளபதி தன் இடையிலுள்ள உடையைத் தன் கைகளால் இறுக்கிப் பிடித்துக்கொள்ள முயல்கிறாள். அந்தப் போராட்டம் நிகழ்கின்றவரையில் கண்ணன் தோன்றவில்லை. தன் முயற்சி பலிக்காது என்று கண்ட பாஞ்சாலி தன் இரண்டு கைகளையும் மேலே துரக்கி 'கோவிந்தா' என்றவுடன் கண்ணபிரானின் கருணை, வெள்ளமாக அவள்மாட்டுப் பாய்கின்றது. துச்சாதனன் உரியஉரிய நூற்றுக்கணக்கான புடைவைகள் தோன்றின. இறைவனிடம் உண்மையாகச் சரண் அடைந்தவர்கள் இரண்டு கைகளையும் சிரத்தின்மேல் தூக்கிக் குவித்தல் ஒன்றுதான் சரியான வழியாகும். இதனைக் கூறவந்த அடிகளார் சிரம் குவிவார் என்று கூறுகிறார். இங்கேயும் சிரம் குவிப்பார் என்று சொல்லாமல் 'குவிவார்’ என்றே சொல்வது சிந்திப்பதற்குரியது. மனத்தில் நினைந்து; பின்பு கைகளைக் குவிப்பது, முழுவதும் பக்குவம் அடையாத உயிர்களின் செயலாகும். தற்போதம், தன்னுடைய முயற்சி என்ற