பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 திருவாசகம் - சில சிந்தனைகள் இரண்டினால் விளைவது குவிப்பதாகும். தற்போதம் இழந்து, தான்’ என்ற நினைவு இன்றி, தன்முயற்சி இல்லாதபோது கைகள் தாமே ஒன்று குவிவது பக்குவம் அடைந்த ஆன்மாக்களின் இயல்பாகும். அதனைக் குறிப்பால் உணர்த்தவே சிரம் குவிவார் என்று சொல்கிறார் அடிகளார். இந்த அடியில் உள்ள ஓங்குவிக்கும் என்ற சொல் ஆழமான பொருளுடையதாகும். நீருக்குள் மூழ்குபவன் இனித் தன் முயற்சியால் மீள முடியாது என்பதை உணர்ந்து தன் கைகளை மேலே தூக்கியவுடன், கரையில் நிற்பவர்கள் அந்தக் கைகளைப் பிடித்து அவனைக் கரையேற்றுகிறார்கள். அதேபோலப் பிறவிப் பெருங்கடலில் அமிழ்ந்துகொண்டிருப்பவன், வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்து, 'உன் திருவடிகளே சரணம் என்று மன, மொழி, மெய்களால் துதித்த அந்த விநாடியே சிரத்தின் மேலே கைகள் குவிய, அவர்களைப் பிறவிக் கடலிலிருந்து தூக்கிவிடுகிறான் இறைவன். பிறவி எனும் ஆழ்கடலிலிருந்து தன்திருவடிக்கு இறைவன் ஏற்றுவதை "ஓங்குவிக்கும்’ என்ற சொல்லாற் குறிப்பிடுகிறார். ஈசன் அடிபோற்றி எந்தை அடி போற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீர் ஆர் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி (11-15) என்பதாக நாதன் தாள் வாழ்க’ எனத் தொடங்கி, தேவன் அடி போற்றி என்று முடிகிற வரை பதினைந்து அடிகளில் திருவடியையே குறிக்கின்றார் அடிகளார். நாம, ரூபம் கடந்து நிற்கின்ற பரம்பொருளைத் தியானித்தல் எல்லோருக்கும் முடியாமையால், அவரவர்கள் மனநிலைக்கேற்ப ஏதோ ஓர் உருவத்தை