பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 49 அந்தப் பரம்பொருளுக்குத் தந்து தம் மனத்தில் இருத்திக் கொள்கின்றனர். மனிதர்கள் பரம்பொருளுக்கு மனித வடிவம்தான் தரமுடியும் என்று விவேகானந்தரும் கூறிச் செல்கிறார். இந்து மதம் என்ற பொதுப் பெயரில் அடங்கும் சைவ, வைணவ, கெளமார, சாக்த, காணா பத்யம் முதலிய சமயப் பிரிவுகளுள் இறைவனுக்குப் பல்வேறு வடிவங்கள் தந்துள்ளனர். மேற்கண்ட பிரிவுகளில் ஒரே பிரிவினர்கூட அவர்களது சமய மூர்த்திக்குப் பல்வேறு வடிவங்களை அமைத்துள்ளனர். தங்க ஆபரணங்கள் பல்வேறு வகையாகக் காட்சி அளித்தாலும், அவற்றின் மூலப்பொருளாகத் தங்கம் ஒன்று மட்டுமே இருப்பதுபோல, பல்வேறு வடிவங்களில் காணப்படினும் மூலப்பொருளாக இருப்பவன் இறைவன் ஒருவனே ஆவான். இதை நன்கு அறிந்த நம் முன்னோர் இந்த எல்லா வடிவங்களுக்கும் திருவடிகளை அமைத்தனர். அமைத்ததோடுமட்டும் அல்லாமல் எல்லா உயிர்களுக்கும் பற்றுக்கோடாக அடைக்கலம் தரக்கூடியது இத் திருவடிகளே என்றும் கூறினர். வேறுவகையாகக் கூற. வேண்டுமானால், திருவருளுக்குத் திருவடி என்பது பரியாயச்சொல்லாக (ஒரு பொருள் குறித்த இரு சொல்லாக வழங்கப்பெற்றது என்று நினைப்பதில் தவறு இல்லை. - ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் இறைவன் துணையை நாடுகின்றோம். அவ்வப்போது அந்தத் திருவருள் துணையாக வந்து துயரத்தைப் போக்குவதுடன் மகிழ்ச்சியையும் தருகின்றது. எனவே, ஒருவருடைய வாழ்நாள் முழுவதிலும் துயரத்தைப் போக்குவதற்கும், அமைதியைத் தருவதற்கும், இறுதிய்ாக வீடுபேற்றை நல்குவதற்கும் காரணமாக இருப்பது திருவருள் ஒன்றேயாகும். நன்றி உடையவர்கள், ஒரே ஒரு உபகாரம் செய்தவர்களைக்கூட, வாழ்நாள் உள்ளவரை மறக்கக் கூடாது என்று குறள் கட்டளை இடுகிறது.