பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருவாசகம் - சில சிந்தனைகள் செய்ந்நன்றி மறத்தல் மாபெரும் பாதகம் என்றும் குறள் கூறுகிறது. அப்படியானால், பிறவிதோறும் வரும் துன்பங்களை நீக்கி, இந்த ஆன்மாவை மேலும் மேலும் உயர்த்திச் சென்று, இறுதியாக வீடுபேற்றை நல்கும் திருவருளை ஒரு முறைக்குப் பதிலாகப் பதினைந்து முறை அந்தத் திருவடி வாழ்க, வெல்க என்று கூறுவதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆராத இன்பம் அருளும் மலை போற்றி (16) இன்பம், துன்பம் இரண்டுக்குமே ஒர் இயல்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் பிறகு இன்பமும் சலித்துவிடும். அமிழ்தமாக இருப்பினும் அது தெவிட்டத் தொடங்கிவிடும். ஆனால், இறைவன் தருகின்ற இன்பம்ஆனந்தம்-தெவிட்டாததாய், குறையாததாய், என்றும் உள்ளதாய் இருத்தலாலே ஆராத இன்பம் என்றார். ஆராத என்று தொடங்கியதால் மூன்றாவது சீரில் மோன்னயாக அருளும் என்றாரோ என்று இதனைப் பாராட்டுபவர்களும் உண்டு. திருவாசகத்தைப் பொறுத்த மட்டில், அது இந்த இலக்கணத்திற்கு அப்பாற்பட்டது என்பதை மறந்துவிடலாகாது. அருளும் என்ற சொல்லி னால் ஒரு பெரும் கருத்தை விளக்குகிறார் அடிகளார். அன்புக்கு மேற்பட்டது அருள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பல சமயங்களில் அன்பு தோன்றக் காரணம் இரத்த பாசம் அல்லது அவர்கள் செய்த நலன்கள் என்பவை ஆகும். ஆனால், அருளைப் பொறுத்தமட்டில் எவ்விதத் தொடர்பும் இல்லாதவர்கள் மாட்டும், தகுதிபற்றி ஆராயாமற் சுரப்பதே அருளாகும். இந்த உயிர்கள் எல்லாம் இறைவனால் இந்த உலகத்தில் படைக்கப்பட்டவை ஆகும். அவன் தந்த தனு, கரண, புவன, போகங்களை அனுபவிக்கின்றன. இந்தப் பொருள்கள் அவன் தந்தவை என்ற நினைவு ஒரு சிறிதுமின்றி பலர் வாழ்கின்றனர். ஏதோ இவற்றை