பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 51 எல்லாம் தாமே தமது முயற்சியால், அறிவின் திறத்தால் படைத்துக் கொண்டதாக நினைக்கின்றவர்களும் உண்டு. ஆழ்ந்து சிந்திக்கின்றவர்கள் மட்டுமே ஒன்றை விளங்கிக்கொள்ள முடியும். இவ்வளவு பொருள்கள் நிறைந்திருந்தும் இவற்றிலிருந்து இன்பம் பெறுவதென்பது எல்லோருக்கும் இயலாத காரியம். கோடிக்கணக்கான பொருளைப் பெற்றவர்களும் தூங்கக்கூட முடியாமற் துரக்க மாத்திரையின் துணையை நாடுவது கண்கூடு. இது குறித்தே வள்ளுவப் பேராசான், வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது 哆 - குறள்-377) என்று கூறிப்போனார். பொருள்களைப் பெற்றுவிட்டால் மட்டும் இன்பம் கிடைத்துவிடாது. அடிகளார். இத்தனை கருத்துகளையும் உள்ளடக்கி, ஆராத இன்பம்’ என்றும், நம்முடைய தகுதியைக்கூடப் பாராமல் இறைவன் 'அருள்கின்றான்’ என்றும் கூறினார். உலகில் வாழும் நமக்கு மனக்குறை ஒன்றுண்டு. நாம் ஒன்றை அனுபவித்துக் கொண்டு இருக்கும்போதேகூட இந்த இன்பம் தொடர்ந்து கிடைக்குமா?, மறுபடியும் கிடைக்குமா?’ என்ற ஐயம் அடிமனத்தில் இருந்து கொண்டிருக்கும். அப்படி ஐயப் படுபவர்களைப் பார்த்து, அமைதி தரும் முறையில் இறைவனை மலை என்கிறார். மலையில் காணப்படும் பகுதி காற்பங்கும், காணாமல் மண்ணுள் அழுந்திய பகுதி முக்காற்பங்கும் இருப்பதுபோல் இறைவன் இப்போதருளிய இன்பம் காற்பங்கு, இனி அருளப்போவது முக்காற்பங்கு என்று நினைக்கும்போது அந்த ஐயம் நீங்கிவிடுகிறது. . . சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி