பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருவாசகம் - சில சிந்தனைகள் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஒய, உரைப்பன் யான் (17-20) சிவன் அவன் என் சிந்தையுள் நின்றான் என்பது முக்கியமான பகுதியாகும். சாதாரண மக்களுக்குக்கூட வாழ்க்கையில் காரண காரியம் சொல்ல முடியாதபடி திடீரென்று மனத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி தோன்றுவதும் உண்டு; எல்லையற்ற துயரம் ஏற்படுவதும் உண்டு. ஷேக்ஸ்பியரின் வெனிஸ் நகர வர்த்தகன்' (Merchant of Venice) என்ற நாடகத்தின் தொடக்கமே இந்த உண்மையை விளக்கும். இவ்வாறு தோன்றுகிற மகிழ்ச்சியோ, துயரமோ மனத்தில் தோன்றுகின்ற காரணத்தால் நீண்டு நிலைபெற முடியாமல் விரைவில் மறைந்துவிடும். மனத்தில் தோன்றும் இவற்றை மகிழ்ச்சி என்றோ. துயரம் என்றோ கூறுகிறோம். இதன் எதிராக மனத்தைக் கடந்துநிற்கும் சித்தத்தில் தோன்றுவதை இச்சொற்களால் குறிப்பதில்லை. அதனை ஆனந்தம் அல்லது பேரின்பம் என்றே குறிக்கிறோம். தோன்றிய ஆனந்தம் அல்லது பேரின்பம் நிலையாக சித்தத்தின் ஆழத்தில் நிற்பதால் சற்று நின்று நிதானிக்க வேண்டும். அடி மனத்தின் ஆழத்தில் இருப்பது சித்தம். அந்தச் சித்தத்தின் ஆழத்தில், பேரின்பம் தோன்ற வேண்டுமானால் அதைத் தோற்றுவிக்கும் ஆற்றல் நம்மிடத்தில் இல்லை. அகமனத்திற்கு அப்பால் செல்வது இயலாத காரியம். மகான்கள், யோகிகள், ஞானிகள் ஆகியவர்கள் மட்டுமே சித்தத்தை ஆளும் ஆற்றல் பெற்றவர்கள். அந்த ஆழமான சித்தத்தின் அடிப்பகுதியில் நிலைத்த பேரின்பம் இருப்பதாகப் பேசுகிறார் அடிகளார். 'சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்' என்று சொல்கிறாரே அதனை எவ்வாறு கண்டார் ? திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில், இறைவன் ஞானாசிரியனாகத் தோன்றி நயன, ஸ்பரிச, திருவடி தீட்சைகள் தந்தபிறகு மாபெரும் அறிஞராகிய அடிகளார்