பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் . 53 தம்முடைய பழைய மன நிலைக்கும், புதிய மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்கிறார். முன்பு மனத்தின் மீதுகூட ஆட்சி செலுத்துவது கடினமாக இருந்தது. @UCLT33.st Lisplogrib (External mind), -9/5106&Tib (Internal mind), śāsār Gioff) 1655 (Conscious mind), -915&t epito-LL1653 (Deeper consious mind) 6T6ärp [576#605usto or முடிகிறது. எதனால் இது முடிகிறது என்று சிந்திக்கத் தொடங்கிய ஒரு விநாடியிலேயே உணர்ந்துவிடுகிறார் அடிகளார். குருந்த மரத்தடியில் குருபரனாக வந்தவன் இன்னார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவனுடைய திருவடியொன்று பூமியில் பதிந்திருக்கிறது. அப்படியானால் மனிதன் என்றுதானே நினைத்திருக்க வேண்டும். இந்த மனித உடலோடு இருப்பவன் இறைவன் என்பதை அடிகளார் தெரிந்துகொண்டார். இவ்வாறு மனித உடலோடு அவன் வந்தது தன் தகுதி நோக்கி அன்று; இறைவனின் பேரருளால் நடைபெற்றது என்ற எண்ணம் வந்தவுடன் மெய் விதிர்த்துப் போகிறார். இதனை, கனவிலும் தேவர்க்கு அரியாய் போற்றி நனவிலும் நாயேற்கு அருளினை போற்றி (திருவாச 4-143-144) என்று உள்ளுருகிப் பாடுகின்றார். இயல்பாகவே மிக உயர்ந்தவனாகிய பெருமானையும், ഭTഭിരഞ്ജു மீறித் தாழ்ந்துள்ள தம் இயல்பையும் சிந்திக்கிறார். அந்த இன்பம் தமக்கு எப்படி வந்தது என்று நினைக்கிறார். அந்த விநாடியே ஒன்று உறுதியாகிறது. இதுவரையில் தம்முடைய அதிகார எல்லைக்கு உட்பட்டிருந்த புறமனம், அகமணம், சித்தம் ஆகியவை இப்போது இறைவனின் அதிகார எல்லைக்குள் சென்றுவிட்டன என்பதை உணர்ந்து, சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்’ என்றார். நின்ற’, என்ற சொல்லை மிக ஆழ்ந்து எண்ணிடல் வேண்டும். பவு