பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 திருவாசகம் - சில சிந்தனைகள் சமயங்களில் பலருடைய அனுபவத்தில் இறையனுபவம் ஒரு சில விநாடிகள் வந்து போவது உண்டு. அவன் உள்ளே வந்தபோது ஏற்பட்ட அமைதி, ஆனந்தம் விரைவிலேயே இழக்கப்படுவதால் அவன் நம்மைவிட்டு நீங்கிவிட்டான் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அவன் எப்போது வருவான், எப்படி வருவான் என்றெல்லாம் அறிவது இயலாத காரியம். இக்கருத்தைக் கம்பநாடர், வாராதே வரவல்லாய், வந்தாய்போல வாராதாய் (கம்பன் ஆரண்-1-54) என்றும் கூறுகிறார். இதை மனத்தில் கொண்டால், சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற, என்றைக்குமே நீங்காது நின்ற, காரணத்தால் சிவபுராணத்தைச் சொல்லப் போகிறேன் என்று தொடங்குகிறார். அவன் சிந்தையுள் நின்ற காரணத்தினால் அவனுடைய பெருமையை உரைக்க முடிந்தது என்கிறார். ‘சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள்வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான் என்ற பகுதியில் சிவபுராணத்தைச் சொல்லப்போகிறேன் என்கிறார். அதில் சிந்தை மகிழ்ச்சி என்ன? என்றும் உள்ளவனாகிய இறைவனுடைய பெருமையை ஆராய்ந்து, சிந்தித்து, அறிவது ஒரு முறை. அறிவு, ஆராய்ச்சி என்பவற்றை மூட்டைகட்டி வைத்துவிட்டு அனுபவ ரீதியாக அனுபவிப்பது மற்றொரு முறை. இந்த அனுபவத்திற்குக் காரண காரியமோ விளக்கமோ கூற முடியாது. ஒன்றை உரைத்தால் செவிவழிப் புகுந்து, அது புறமனத்தை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கலாம். அதற்கப்பால் போவது கடினம். காதல் ஒன்றில்மட்டும் ஐம்புலனுக்கும் இன்பம் உண்டு என்கிறார் வள்ளுவப் பேராசான்.