பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 55 அங்கேயும்கூட பொறிகளின் உதவியினால் ஏற்படும் இன்பத்தைப்பற்றிப் பேசினாரேதவிர அகமனத்தின் ஆழத்தில் தோன்றும் உணர்ச்சியைப் பற்றிப் பேசவில்லை. அது கிடைக்கக்கூடிய ஒரே இடம் இறையனுபவம்தான். ஆக, சிவபுராணத்தை உரைக்க வேண்டுமென்று கருதினேன்; உரைக்கத் தொடங்கினேன்; என்ன அதிசயம்! உரைக்க உரைக்க என் புறமனம் மகிழ்ந்தது; அகமனம் மகிழ்ந்தது; சித்தத்தின் மேற்பகுதி மகிழ்ந்தது; சித்தத்தின் அடிப்பகுதியும் மகிழ்ந்தது. அந்த அனுபவம் எப்படி வந்தது என்று கேட்பாருக்கு விடை கூறுபவர்போல, 'அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்’ என்று கூறிவிட்டார். அவன் சிந்தையுள் நிற்கின்றான் என்று கூறுவதால் சிந்தைக்குத் திருவடி சம்பந்தம் ஏற்படுகிறது. எனவே, சிவபுராணத்தை உரைக்க முடிகின்றது. அப்படிச் சொல்லும்போது சிந்தையின் ஆழத்தில் இன்பமும் ஏற்படுகிறது என்ற தம் அனுபவத்தைப் படிப்படியாகச் சொல்கிறார். இனி, சிவபுராணத்தை உரைப்பதால் உடனடிப் பலனாக, சிந்தையில் ஆனந்தம் உண்டாகிறது. இதை அல்லாமல் நீண்ட காலப் பலன் ஒன்றும் விளைகிறது. அது என்ன பயன் தெரியுமா? முந்தை வினை முழுவதும் ஓய்ந்ததாம். முந்தை வினை முழுதும் என்று கூறுவதால் சஞ்சிதம், பிராரத்துவம் ஆகிய இரண்டையும் கூறினாராயிற்று. ஆகவே, இறைவனுடைய பெருமையைக் கூறத் தொடங்கினால் சிந்தை மகிழ்வு என்ற உடனடிப் பயனும், வினைக்கழிவு என்ற நீண்ட காலப் பயனும் ஏற்படுவதை அடிகளார் வலியுறுத்துகின்றார். இதை விளங்கிக்கொள்வது எளிது. தேனை உண்ணும்போது அதன் சுவை காரணமாக மனத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது; அதே தேன் பின்னர் மருந்தாகவும் இருந்து நோயைக் குணப்படுத்துகிறது. தேன்