பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 திருவாசகம் - சில சிந்தனைகள் போல் இருப்பது இறைவன் பெருமை. அதை உண்பது இறைவன் பெருமையைப் பேசுவது போன்றதாகும். அறிவு வளர்ந்துவிட்ட இக்காலத்தில் நம்முடைய முயற்சியாலேயே எதையும் சாதித்துவிடலாம் என்று நினைக்கின்ற பலர் உண்டு. அரைகுறையான விஞ்ஞானிகளும் இக்கருத்துக்கு உடன்படலாயினர். ஆனால், ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞான மேதைகளும், அடிகளார் போன்ற அருளாளர்களும் மனித அறிவின் எல்லை, மனித மனத்தின் எல்லை என்ற இரண்டையும் நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் எல்லாவற்றையும் நாமே செய்து விட முடியும் என்று கருதியதும் இல்லை; சொல்லியதும் இல்லை. எந்தப் பொருளை அறுவடை செய்ய வேண்டுமோ அதே பொருளை விதைக்க வேண்டும். அது நெல்லாக இருப்பினும் அல்லது வேறு எந்தத் தானியமாக இருப்பினும் ஒரு சிறிதளவு வயலில் விதைத்துத் தண்ணிர் பாய்ச்சிக் கொண்டு வரவேண்டும். அத் தானியம், பயிராக முளைத்து, பல கதிர்கள் விட்டு, ஒவ்வொன்றிலும் நூற்றுக் கணக்கான தானியங்கள் தருவதை நாம் அனுபவத்தில் அறிவோம். இந்தச் செயலிற் கூட நம்முடைய அறிவிற்கும், அனுபவத்திற்கும் அப்பாற்பட்ட பல நிகழ்ச்சிகள் புகுந்துவிடுகின்றன. சரியான நிலமும், சரியான விதையும், தண்ணிர் பாய்ச்சுதல் போன்ற அனைத்தும் சரியாக இருப்பினும் விளைச்சல் பதராகப் (சாவியாகப்) போவதும் உண்டு. இது இன்னமும் நடைபெறுகின்ற ஒன்றாகும். ஆனால், நெல் வேண்டுவோர் நெல் விதையைப் பூமியில் விதைக்கவேண்டும் என்பதை மறுத்தலாகாது. அதேபோல அவன் திருவடிகளை வணங்குதல் ஆகிய பயனைப் பெறவேண்டுமானாற்கூட அதற்கும் அவன் அருள் வேண்டும். அவன் அருள் இல்லாமல் நாம் வணங்க முடியாதா? முடியும். வணங்குதல் ஆகிய செயலுக்குக்