பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 57 கர்த்தா நாம் தானே? ஆகவே உறுதிப்பாட்டோடு வணங்கத் தொடங்கினால் வணங்கலாம். ஆனால், அதனால் கிடைக்கும் பயன் இராவணன் முதலியோர் பெற்ற பயனேயாகும். அந்தப் பயன் நன்மை விளைப்பது இல்லை. ஆகவே வணங்குதல் ஆகிய செயலுக்கு நாமே கர்த்தாவாக இருப்பினும், தொடங்கும்பொழுதே திருவடிகளைச் சரணம் புகுந்துவிட்டால் எவ்விதச் சிக்கலுமின்றித் திருவருளைப் பெறமுடியும். எனவே, வணங்குதல் ஆகிய செயலுக்குக்கூட அவன் அருள் வேண்டும் என்கிறார். அவன் அருளால் வணங்குதல் ஆகிய செயல் கைகூடுமானால் சிந்தை மகிழ்தல் ஆகிய அண்மைப் பயனையும், வினை கழிதலாகிய நீண்ட காலப் பயனையும் தவறாது அளிக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்த வந்த அடிகளார், 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்றார். r சிந்தை மகிழச் சிவபுராணம் தன்னை முந்தை வினை முழுதும் ஒய உரைப்பன் யான் என்ற அடிகளில் வரும் உரைப்பன் யான்’ என்ற இரண்டு சொற்களை ஆழ்ந்து காண்டல் வேண்டும். யான் என்ற தன்மை ஒருமைப் பெயரும் உரைப்பன்' என்ற தன்மை ஒருமை வினைமுற்றும் இன்றும் புழக்கத்திலுள்ள சொற்கள் ஆகும். இன்று யாராவது ஒருவர் இவ்வாறு சொன்னால் பெரியவர்கள் கடிந்துகொள்வார்கள். 'யான் சொல்கிறேன்’ என்பது அகங்காரத்தின் வெளிப்பாடு அல்லவா? - மாபெரும் கல்வியாளராகவும், கவிஞராகவும், முதலமைச்சராகவும் இருந்த திருவாதவூரர், அமைச்சராக இருந்தபொழுது யான் சொல்கிறேன், இதன்படி செய்க" என்று பல சமயங்களில் ஆணையிட்டிருப்பார். அங்கே யான் என்பது திருவாதவூரர் என்ற மனிதரைக் குறிக்கவில்லை. அவர் மேற்கொண்ட பதவியைக் குறித்த