பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 திருவாசகம் - சில சிந்தனைகள். தாகும். ஆக, மந்த மதிகள் ஆகிய ஒருசிலரைத் தவிர ஏனையோரைப் பொறுத்தமட்டில் பதவியில் இருப்பவர்கள் யான் என்று சொல்வதற்கும், திறமை எதுவுமே இல்லாதவர்கள் தம்மைப் பெரிதாக மதித்துக் கொண்டு யான் என்று சொல்வதற்குமுள்ள வேறுபாட்டை அறிய முடியும். அமைச்சராக இருந்தபோது 'யான் உரைக்கிறேன்’ என்று அடிகளார் கூறியிருந்தால் அது அவருடைய பதவியின் அடிப்படையாக வந்த கூற்றாகும். இப்போது உரைப்பன் யான்’ என்று சொல்கிறாரே இது எந்த அடிப்படையில் என்று சிந்திப்பதில் தவறு இல்லை. நமக்கு ஒரு குழப்பம் வராமல் இருக்க அடிகளாரே அதற்கு விளக்கம் தருகிறார். சிவன், தானே வந்து என் உள்ளத்துள் புகுந்து இங்கேயே தங்கிவிட்ட காரணத்தால் என்னுடைய பொறி, புலன்கள், என்னுடைய சொற்கள் ஆகிய அனைத்தும் பழைய திருவாதவூரனுடைய உரையல்ல. சிவன் சிந்தையுள் நின்ற அதனால் உரைப்பன் யான் என்கிறபோது இவர் சிவனுடைய கருவியாக நின்று கூறுகிறார் என்பதை உணர முடிகிறது. இறைவன் பெருமையைச் சாதாரண மனிதர்கள் அறியவோ, கூறவோ இயலாது. அவனுடைய அருளைப் பெற்றவர்களே அதனைச் செய்ய முடியும். சஞ்சிதம், பிராரத்துவம் ஆகிய இரு வினைகளையும் போக்கக் கூடியவன் இறைவன் ஒருவனே ஆவான். யான் சிவபுராணத்தை உரைப்பதால் என்னுடைய முந்தை வினைகள் முழுவதுமாக அற்றுவிட்டன என்று அடிகளார் கூறுவதால் தம் உள்ளத்துள்ளே இருப்பவன் இறைவன்தான் என்பதை உறுதிப்படுத்துகிறார். ஒய உரைப்பன் யான்' என்ற தொடரில் ஒய என்ற வினையெச்சம் உரைப்பன் என்ற வினைகொண்டு முடிகிறது. அப்படியானால், ஒய என்ற சொல்லுக்கு 'ஒழியும்படி என்று பொருள் கொண்டால், வினைகள் இனி ஒய்வதற்காகச் சிவபுராணத்தை உரைப்பன் என்று