பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் , 59 முடியும். இவ்வாறு பொருள்கொண்டால் உரைத்ததன் பயனாகவே வினை ஓய்ந்தது என்று பொருள்கொள்ள நேரிடும். அப்படியானால், வினை ஒய்ந்தமையால் சிவபுராணம் உரைக்கப்பட்டதா? அல்லது சிவபுராணத்தை உரைத்ததால் வினை ஒய்ந்ததா? என்ற வினாக்களுக்கு விடைகாண முற்பட்டால் ஒர் அற்புதமான பொருள் கிடைக்கின்றது. ஒய’ என்ற வினையெச்சத்திற்கு ஒய்ந்ததால் என்றும், ஒய்வான்வேண்டி என்றும் பொருள் கொள்ளலாம். சிவபுராணத்தை முதன்முதலாக உரைத்தவர் அடிகளார்; அவருக்குப் பின்னர் பல்லாயிரவர் அதனை உரைக்கின்றனர். முதலில் உரைத்தவர், பின்னர் அதனை உரைப்பவர்கள் ஆகிய இருசாராருக்கும் பொருந்த ஒய’ என்ற சொல் பயன்படுத்தப் பெற்றுள்ளது. அடிகளாரைப் பொறுத்த மட்டில் குருவின் திருவடி பட்டு. முந்தை வினை முழுதும் ஓய்ந்ததால் சிவபுராணத்தை உரைப்பன் என்றார்.ஏனையோரைப் பொறுத்தமட்டில் முந்தை வினை முழுதும் ஒய்வான்வேண்டி சிவபுராணத்தை உரைப்பர் எனறாா. கண் நுதலான் தன் கருணைக்கண் காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழில் ஆர் கழல் இறைஞ்சி விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கு ஒளியாய் எண் இறந்து எல்லை இலாதானே நின் பெரும் சீர் பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன் (21–25) இந்த ஐந்து அடிகளும் முன்னால் உள்ள நான்கு அடிகளிலும் மாறுபட்டவை. அங்கே அவன் சிந்தையுள் நின்ற காரணத்தால் உரைப்பன் யான் என்று கூறிய அனுபவநிலை வேறு. இந்த அடிகளில் சொல்லப்பட்ட அனுபவநிலை வேறு.