பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 திருவாசகம் - சில சிந்தனைகள் பழைய அனுபவத்தில் சிவன் சிந்தையுள் நிற்பதை அடிகளாரின் ஐந்து புலன்களும், புற மனமும், அக மனமும் உணர்கின்றன. ஆகவே, எல்லையற்ற ஆனந்தம் முழுவதும் பரவி நிற்கின்றது. ஆனால் என்ன காரணத்தினாலோ இறைவன் இந்த அனுபவத்தை அடிகளாரிடமிருந்து பிரித்துவிடுகிறான். இதற்குரிய காரணம் யாதாக இருக்கும் என்பதைப் பின்னர்க் காணலாம். அந்த அனுபவம் தம்மை விட்டுநீங்கியதை அடிகளார் உணர்கின்றார். மிக விருப்பமான இனிப்பைக் கையில் வைத்து, இது முழுவதும் தமக்கே உரியது என்ற நம்பிக்கையுடன் வாயிலிட்டு சப்புகின்ற குழந்தைகளிடம் இருந்து, அந்த இனிப்பை யாராவது பிடுங்கிவிட்டால் குழந்தை என்ன பாடுபடுமோ அதே நிலைதான் அடிகளாருக்கு ஏற்படுகிறது. அனுபவ நிலையில் இருந்தபோது அந்த அனுபவத்தைத் தந்தவனுடைய, கற்பனைக்கும் எட்டாத பெருமையை, சிறப்பை உணர முடியவில்லை; அது நினைவில் தோயவும் இல்லை, அனுபவம் ஒன்றிலேயே மூழ்கிக் கிடத்தலின், தான்', 'அவன்' என்ற வேறு பாட்டிற்கோ, தனக்கு அந்த அனுபவத்தைத் தந்தவன் யார் என்ற ஆராய்ச்சிக்கோ அங்கு இடமே இல்லை. அந்த அனுபவம் நீங்கிப்போனவுடன் அதுபற்றி நினைந்து பார்க்கிறார் அடிகளார். சங்ககாலச் சான்றோர்கள் பேரின்ப அனுபவத்தை மட்டுமல்லாமல் சிற்றின்ப அனுபவத்தையும்கூட நன்கு ஆராய்ந்திருந்தார்கள். தலைவனும் தலைவியும் சேர்ந்திருந்து அனுபவிக்கும் இன்ப வாழ்க்கையைக் குறிஞ்சித்திணை' என்று கூறினர். பிரிந்தபோது, சேர்ந்திருந்ததை நினைந்துநினைந்து, அப்போது கிடைத்த இன்பத்தைப் பலகாலம் பன்னிப் பன்னிப் பேசுவது 'பாலைத்திணை' எனப்படும். குறிஞ்சியைவிடப் பல மடங்கு அதிகமான பாடல்கள் பாலைத்திணைக்கு உண்டு. பிரிந்திருக்கும்போதுதான்