பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi அப்படியே கூறியுள்ளேன். இவ்வாறு சொல்வதற்குத் தொல்காப்பியத்தில் வரும் இறைச்சி என்ற சொல் வலிவு தந்தது. ‘. . . . அனுபவத்திற்கு வடிவு கொடுக்கும் திருவாசகப் பாடல்கள் ஒரு கோவையாக, ஒரு வரன்முறைக்கு உட்பட்டு வருமென்று சொல்வதற்கில்லை. கோவையும், வரன் முறையும் வேண்டுமானால், அங்கே அறிவு தொழிற்பட வேண்டும். அறிவு தொழிற்படத் தொடங்கினால், உணர் குறையத் தொடங்கிவிடும். - - இக்கருத்துக்களை மனத்தில் கொண்டு ஒரு அடியையோ, சில அடிகளையோ அவ்வப்பொழுது படிக்கச் சொல்லிக் கேட்கும்போது என்ன சிந்தனைகள் மனத்தில் தோன்றினவோ அவற்றை இந்த நான்கு அகவல்களுக்கும் எழுதியுள்ளேன். இச்சிந்தனைகள் என்னுடைய அறிவின் துணைகொண்டோ, அறுபது வருட இலக்கியப் பயிற்சியின் விளைவாகவோ தோன்றியவை அல்ல. யாழ்ப்பாணம் திரு. மார்க்கண்டு அவர்கள் இரண்டு அடிகளையோ, நான்கு அடிகளையோ படித்துக் காட்டிய உடன் அந்த விநாடி என் மனத்தில் தோன்றிய சிந்தனைகளே இங்கு இடம்பெற்றுள்ளன. அதனாற்றான், திருவாசகம் - சில சிந்தனைகள் என்று இந் நூலுக்குப் பெயரிடப்பெற்றுள்ளது. மணிவாசகர் அருள் இருப்பின் திருவாசகம் முழுமைக்கும் இதே முறையில் சிந்தனை களைத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். சிவபுராணத்தைப் பொறுத்தமட்டில் எனது வாய் மொழியைச் சுருக்கெழுத்தில் எழுதிக்கொண்டு, பின்பு அதனைத்தட்டச்சுச் செய்து தந்தவர், சட்டமன்றத் துணைச் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற ரீவித்யா உபாசகர் திரு. .ே S. அனந்தநாராயணன் அவர்கள் ஆவார். ஏனைய மூன் று அகவல்களுக்கும் வாய்மொழியைக் கேட்டு கைப்பட எழுதியவர் யாழ்ப்பாணம் திரு. ச. மார்க்கண்டு அவர்கள்