பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 61 அனுபவத்தின் புறநிலையில் நின்று அந்த அனுபவத்தை ஆராய முடியும். அகநிலையில் (subjective) ஏற்படுவது அனுபவம். அந்த அனுபவத்திலிருந்து வெளியேவந்து, புறநிலையில் (objective) இருந்து பழைய அனுபவத்தை நினைந்து Listfrégio (remembering in tranquility) offg, floogogroñr இப்போது அடிகளாருக்கு ஏற்படுகிறது. திடீரென்று அந்த அனுபவம் அவரைவிட்டுப் போய்விட்டது. எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலை, கற்பனைக்கும் எட்டாத் திருவடியைத் திருப்பெருந்துறையில் நேரிற் கண்டு வணங்கி, தம்மை மறந்து தம் நாமம் கெட்டார் அடிகளார். இப்போது அது இல்லை. அவருடைய மனம் சிந்திக்கத் தொடங்குகிறது. எந்தத் தகுதிபற்றி அந்தத் திருவடிகள் தமக்குக் காட்சி தந்தன? காட்சி தந்ததுமட்டுமல்ல; அதனைத் தொட்டு இறைஞ்சும் வாய்ப்பும் கிடைத்ததே! இதற்கு என்ன தகுதி தம்பால் இருந்தது என்று சிந்திக்கிறார். நினைக்கநினைக்க தம்முடைய சிறுமையும், அந்தத் திருவடியின் பெருமையும் மனத்தில் வருகின்றன. இறுதியாக விடை காண்கின்றார் அடிகளார். 'கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி ஆகிய இரு அடிகளையும் பின்வருமாறு கொண்டுகூட்டுச் செய்வது நலம். கண் நுதலான் குருவாக இவண்) வந்துஎய்தி, தன் கருணைக்கண் கொண்டு), எண்ணுதற்கு எட்டா எழிலார் கழலைக் காட்ட (நான்) இற்ைஞ்சி, அதாவது, திருவடி தமக்குக் காட்சிதந்தது தம் தகுதிநோக்கி அன்று, கண்ணுதலான் தன் அளப்பருங் கருணை காரணமாகவே எண்ணுதற்கு எட்டாத திருவடிகளைத் திருப்பெருந்துறையில் குருவாக வந்து காட்டினான், அதனை நான் இறைஞ்சும் பேறு பெற்றேன் என்றவாறு.