பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 திருவாசகம் - சில சிந்தனைகள் 'கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட என்ற அடியில் வரும் கண் என்ற சொல்லைக் கருணையோடு சேர்த்துக் கருணைக்கண்' என்ற முறையில் மேலே பொருள் காணப்பெற்றது. இவ்வாறு செய்யாமல் கண் என்ற சொல்லை கருணை என்ற சொல்லிலிருந்து பிரித்துக் காட்ட' என்ற சொல்லோடு சேர்த்தால் வேறொரு {3}}{3}}:{{ #ffffff பொருள் கிடைக்கின்றது. கண்ணுதலானுடைய கருணை காரணமாக குருவாக இங்குவந்து எய்தி, எழிலார் கழலை என் கண்ணுக்குக் காட்டி, அத்திருவடிகளை இறைஞ்சுமாறு செய்தான். உருவம் அற்ற பொருளாக இறைவன் இருக்கும்போது அடிகளாரின் கண்கள் அத்திருவடிகளைக் காணுமாறு இல்லை. நாம, ரூபம் கடந்த அவன் குருவாக மானுட வடிவில் திருப்பெருந்துறையில் வந்து எய்தியதற்கு முக்கியமான காரணம், எண்ணுதற்கு எட்டாத அவனுடைய எழிலார் கழலை அடிகளாரின் ஊனக் கண்களுக்குக் காட்டவே என்றும் பொருள் கொள்ளலாம். இப்போது அவனுடைய பெருமையையும், தம்முடைய சிறுமையையும் ஒப்பு நோக்கிப் பார்க்கின்றார். 'விண் நிறைந்து மண் நிறைந்து மிக்காய் விளங்கொளியாய்” என்று அவன் பெருமைபேசி அமையாமல், எண் இறந்து, எல்லை இலாதானே என்ற இரண்டு தொடர்களையும் பயன்படுத்துகிறார். எண் என்பது தொகுத்து விரிவாக எண்ணும் அளவையாகும். ஒன்று, இரண்டு,... .ஆயிரம் என்று எண்ணிக் கொண்டே சென்றால் இன்றைய விஞ்ஞானம் எண்ணிலி (Infinity) என்று கூறும் ஒரு சொல்லைத் தரும். இந்த அற்புதச் சொல்லைத்தான் அடிகளார் எண் இறந்து என்று சொல்கிறார். அடுத்து நிற்பது எல்லை இலாதானே' என்பதாகும். எல்லை வகுத்தல் (space) என்பது பரப்பளவைக் குறிக்கும் சொல்லாகும். இன்று நாம் இவ்வளவு சதுரக் கிலோ மீட்டர் என்று கூறுகிறோம் அல்லவா? அந்தப்