பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருவாசகம் - சில சிந்தனைகள் பிற்பகுதியிலேகூட அதற்கு எதிர்ப்பும் மறுப்பும் தோன்றலாயின. டார்வின் கொள்கையில் பல்வேறு உயிரினங்களின் உடற்கூறுமட்டும் ஆயப்பட்டதே தவிர அவ்வுடலினுள் உறையும் உயிர்பற்றிய சிந்தனை அந்த விஞ்ஞானிக்கு ஏற்படவே இல்லை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை மிகப் பழங் காலந்தொட்டே இந்த மாறுபட்ட உயிரினங்களிடையே இருக்கும் உறவுமுறை தமிழர்களால் கண்டறியப் பட்டிருந்தது. அழிவில்லாத உயிர் கூர்தல் முறையில்’ ஒவ்வொரு உடம்பினுள்ளும் புகுந்து, தோன்றி, வளர்ந்து, அழிந்து மற்றோர் உடலில் புகலாயிற்று என்ற கருத்து, இந்தியா முழுவதும் பரவியிருந்த மிகப் பழைய கருத்தாகும். இந்த உயிரினங்களுக்குள் அந்தர்யாமியாய் இறைவன் உறைகின்றான் என்ற கருத்தைச் சைவ, வைணவச் சான்றோர்கள் என்றோ கண்டு கூறினர். திருஞானசம்பந்தர், - உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்துஅவற்றின் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் கோயில் (திருமுறை :1-132-4) என்று வரும் பாடலில் இவ்வுயிர் 84 லட்சம் வேறுபட்ட உடல்களோடு வாழ்ந்துவருகிறது என்பதையும், இவ்வனைத்தையும் படைத்து அந்தந்த உடம்பினுள் உறையும் உயிர்களினுள்ளே உயிராய் இருப்பவன் இறைவனே என்றும் கூறுகிறார். ஆதலின், இக்கருத்து இந்நாட்டில் பழமையானது என்பதை அறிய முடியும். திருஞானசம்பந்தர் காலத்திற்குப் பல நூற்றாண்டு களுக்கு முன்னரே தோன்றிய புராணங்களில் திருமால் எடுத்த f_16λ) அவதாரங்கள் பேசப்பட்டிருப்பதைப்