பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் : 65 பார்க்கிறோம். அவை மீன், ஆமை, வராகம், நரசிம்மம், வாமனன் என்ற முறையில் பேசப்படுவதைக் காணலாம். இந்த அவதாரங்களின் வரிசைக்கிரமத்தைச் சிந்தித்தால் 'கூர்தல் அறத்தை இந்நாட்டவர் என்றோ கண்டு கூறினர் என்று அறிய முடியும். இயங்கும் உயிர்களின் தோற்றத்தை அமைக்கும் முறையில் நீரில்மட்டும் வாழக்கூடிய மீனை முதலாவது ஆகவும், நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய ஆமையை இரண்டாவதாகவும், நிலத்தில்மட்டும் வாழக்கூடியதும், நான்கு கால்களும், முதுகெலும்பும் பெற்று வாழ்வதுமாகிய வராகத்தை மூன்றாவதாகவும், மனித உடலுடன் விலங்குத் தலை பெற்ற நரசிம்மத்தை நான்காவதாகவும், வளர்ச்சி அடையத் தொடங்கிய மனித வடிவின் தொடக்கமான வாமனனை ஐந்தாவதாகவும் அமைத்த முறை ஏதோ பெளராணிகர்கள் கூற்று என்று ஒதுக்கிவிடுவதற்கில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் விஞ்ஞான அறிவு உயிர் இனங்களின் வளர்ச்சி முறையில் குறித்ததை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்நாட்டவர் கடவுள் எடுத்த அவதாரங்களாகக் கூறினர். எட்டாம் நூற்றாண்டில் தோன்றிய மாணிக்கவாசகர் ஒரு மாபெரும் விஞ்ஞானி என்பதை முதன் முதலாக அறிந்துகொள்கிற இடம் சிவபுராணத்தில் காணப்பெறும் 26-31ஆம் அடிகளாகும். இது கவிதை ஆதலின் ஆசிரியப்பா அமைப்புமுறைக்கேற்ப, ஓசை நயத்தை யொட்டி வரிசைப்படுத்தியுள்ள அமைப்புமுறையைப் பின் வருமாறு மாற்றிக்கொண்டால் கூர்தல் அறத்தை' அடிகளார் எவ்வாறு பேசுகிறார் என்று அறியலாம்: கல்லாய், புல், பூடு, மரமாய், புழு, பாம்பாய், பறவையாய் பல்வேறு வகைப்பட்ட மிருகமாய், மனிதராய் என்பதாக உயிர் வளர்ச்சிமுறையை வரிசைப்படுத்திக் #ff"#ffff