பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் . 67 இடைக்காலத்தில் பேயாய்க் கணங்களாய்ச் சூக்கும் உடலோடு அலைகிறது. பொறிபுலன்களை அடக்கி முனிவர்களாகப் பரிணமிக்கின்றவர்கள் உடற்கூட்டைத் துறந்து, திரும்பப் பிறப்பு எடுக்கும்வரை இடைக்காலத்தில் தேவர்களாய்ச் சூக்கும உடலோடு வாழ்கிறார்கள். தேவர்களாக வாழ்ந்தாலும்கூட மறுபடியும் பிறக்க வேண்டிய கடப்பாடு. உடையவர்கள் என்பதை இந்நாட்டுச் சமயங்கள் கூறுகின்றன. இவற்றை எல்லாம் உள்ளடக்கி, மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரராகி, முனிவராய்த் தேவராய்’ என்றார் அடிகளார். இதுவரை சொல்லியவற்றைவிட மிகவும் சிறப்பான தாகிய ஒரு கருத்தை அடுத்தபடியாக அடிகளார் பேசுகிறார். செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் என்று கூறுகிறார். இவ்வாறு கூறுவதால் கல், மண், மரம் போன்ற நிலையியற்பொருள்களையும் (ஸ்தாவர), புழுவாய், பாம்பாய், மனிதராய் உள்ள இயங்குநிலைப் பொருள்களையும் (ஜங்கம ஒன்றாகக்கண்டு ஒரே ஆன்மா புல்லில் தொடங்கி, மனிதன் ஈறாக, வருகின்றது என்பதைக் கூறவந்த அடிகளார். ‘எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், என்று கூறுகிறார். இந்த மிகப் பெரிய தத்துவத்தை மிக எளிமையாகவும், அழகாகவும் விளக்கியமை போற்றுதலுக்கு உரியதாகும். அடிகளாருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இந்த உயிர் வர்க்கத்தையும், அவற்றின் இயல்பையும் கண்டு, ஓர் அறிவுடைய உயிர், ஈர் அறிவுடைய உயிர் எனப் பிரித்து அறிந்திருந்தமையை தொல்காப்பியத்தின் ஒன்று அறிவ துவே உற்றறிவதுவே (தொல்:பொருள்-9-27) என்று தொடங்கும் சூத்திரத்தில் காணலாம். இந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் பார்த்தால் புல் முதலியவற்றுக்கு உயிர்