பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 = திருவாசகம் - சில சிந்தனைகள் உண்டு என்பதைத் தமிழர்கள் என்றோ கண்டு கூறியுள்ளனர் என்பது விளங்கும். மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு . உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா, விமலா, விடைப்பாகா, வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே. (32-35) அடிகளார் திருவாதவூரராய்ப் பிறந்து, திருப்பெருந் துறையில் இறையருள் பெற்றபோது ஒரு புதிய பிறப்பை எடுக்கின்றார். இதுவரை அவர் கூறிவந்த பட்டியலில் இப்போது அவர் எடுத்துள்ள பிறப்பு அடங்கவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. முன்னர்க் கூறிய பட்டியலில் மாறிமாறிப் பிறப்பு எடுத்த உயிர் தனது பழைய பிறப்பை உணர்வதும் இல்லை; அடையப் போகும் பிறப்பை அறிவதும் இல்லை. ஆனால், திருப்பெருந்துறையில் புதிய பிறப்பை எடுத்த திருவாதவூரருக்கு வியக்கத் தகுந்த முறையில் தம்முடைய பழமையைக் காண முடிகின்றது. அப்படிக் கண்ட காரணத்தால்தான் 'எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன் எம்பெருமான்' என்று கூறுகிறார். தம்முடைய பழைய பிறப்புக்களைப் புறத்தே நின்று தாமே காணக்கூடிய வாய்ப்பு இவருக்கு எப்படிக் கிடைத்தது? சென்ற பிறப்புக்களிலும், இப்பிறப்பில் திருவாதவூரராகப் பிறந்து திருப்பெருந்துறையில் குரு தரிசனம் பெறும் வரையிலும் இறைவனுடைய திருவடிகளைக் காணும் வாய்ப்புக் கிட்டவில்லை. இந்த ஊனக் கண்கொண்டு திருவடிகளைப் பார்த்துத் தம்மை மறக்கின்ற நிலை அப்பழைய பிறப்புகளில் இல்லை. ஒருவேளை ஆன்ம வளர்ச்சி பெற்றிருந்த காரணத்தால் இப்பிறவியில் இந்தத் திருவடி தரிசனம் கிடைத்திருக்கலாமோ என்று நினைப்பதில் தவறு இல்லை. அப்படிக்