பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராண்ம் - சிந்தனைகள் : 69 கிடைத்திருந்தாலும் அது சூக்கும உடலோடு கனவிடைக் கிடைக்கும் தரிசனமே தவிரப் புற உடலுக்குரிய கண்களால் கண்ட நனவு தரிசனம் அன்று. எத்துணை ஆன்ம வளர்ச்சி பெற்றிருப்பினும் இப்பூதவுடலுடன் வாழ்கின்றவரையில் இவ்வுடலுக்குரிய எல்லைகளை மீற முடியாது. பசு கரணமான இந்த உடலிலுள்ள கண்ணைக் கொண்டு எல்லாவற்றையும் பார்த்தல் இயலாத காரியம். ஆனால், திருவாதவூரர் அனைத்தையும் கடந்து பார்க்கின்றாரே என்றால், அது எப்படி என்பதற்கு விடை வெகுதுரத்தில் இல்லை. திருப்பெருந்துறையில் எழுந்தருளிய ஞானாசிரியன் நயன, ஸ்பரிச, திருவடி தீட்சைகளால் திருவாதவூரரென்ற மனிதருடைய பசுகரணங்களைப் பதிகரணங்களாக மாற்றி விட்டமையால்தான் தம்முடைய பழைய பிறப்புக்களை அவரால் &Tడథగ" முடிகிறது. ஞானாசிரியனின் திருவடிகளைக் கண்டது கனவிலன்று: நனவில்தான் என்பதை மெய்யே உன்பொன்னடிகள் கண்டு இன்று' வீடுற்றேன் என்று கூறுவதால் அறிந்துகொள்ள முடியும். இதே காரணத்தால்தான் மனித வடிவிலிருந்த குருவை, மனிதன் அல்லன்; இறைவனே இவ்வுருக்கொண்டு வந்துள்ளான் என்ற கருத்தில், புவனியில் சேவடி தீண்டினன் காண்க, சிவன் என யானும் தேறினன் காண்க. (திருவாச : திருவண்ட : 61-62) என்று பாடுகின்றார். இவ்வாறு நினைப்பதற்கு அடிகளாரின் இரண்டு சொற்கள் காரணமாய் அமைந்துள்ளன. ‘மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்’ என்ற அடியில் மெய்யே’ என்ற சொல்லும், 'இன்று என்ற சொல்லும் இந்தச் சிந்தனையைத் துரண்டுகின்றன. திருவாதவூரரின் பரு உடலோடு சேர்ந்துள்ள கண்களால் எதிரே உள்ள குருவின் திருவடிகளைக் கண்ட அந்த விநாடியே அவரின் பசுகரணங்கள் பதிகரணங்களாக மாறிவிட்டன. ஆதலால்,