பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 திருவாசகம் - சில சிந்தனைகள் இன்று மெய்யாகக் கண்டேன் என்று கூறுகிறார். இந்தக் காட்சி கிடைத்தபிறகு அடையவேண்டியது எதுவும் இல்லை என்பதைக் குறிப்பாகத் தெரிவிப்பார் போல 'வீடு உற்றேன்’ என்கிறார். இன்று கண்டு வீடு உற்றேன் என்பதில் ஊனக் கண்களால் புறத்தே உள்ள குருவைஇறைவனைக்-கண்ட காட்சியைப் பேசுகின்றார். இந்தக் காட்சி ஒரே விநாடியில் புறமனம், அகமனம் என்பவற்றைக் கடந்து, சித்தத்தின் மேற்பகுதியைக் கடந்து, -#36ār 2 giréor (deeper consciousness) GL1srüş தங்கிவிடுகிறது. இந்த அடியில் வரும் மெய்யே’ என்ற சொல்லைச் 'சத்திய சொரூபனே' என்ற பொருளில் விளியாகவும் கொள்ளலாம். அடுத்த மூன்றாவது அடியிலும் ‘மெய்யா' என்று இறைவனை விளிக்கின்றார். புறக் கண்களால் காணப்பெற்ற காட்சி குருவின் மானிட வடிவின் காட்சியாகும். ஆனால், அந்தக் காட்சி சித்தத்தினுள் ச்ென்று தங்கும்போது மானிட வடிவத்துடன் தங்கவில்லை. ஓங்கார வடிவாய் நின்றது என்கிறார் அடிகளார். உய்ய, என் உள்ளத்துள் ஓங்காரம் ஆய் நின்ற மெய்யா. ஓங்காரம் என்று சொன்னவுடன் தமிழிலோ, வடமொழியிலோ 'ஓம்' என்ற ஒலியின் வரிவடிவத்தை எழுதிக்கொண்டு, அது எப்படி வளைந்திருக்கும், சுழித்து இருக்கும் என்றெல்லாம் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை. இங்குக் குறிப்பிட்டது வரிவடிவத்தை அன்று. ஓங்காரமாய் என்றும் விமலன் என்றும் கூறுவதால் ஒலி வடிவையே கூறுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒம் என்ற நாதம் ஆதி நாதம் (pri-mordial sound) அதாவது, எல்லா ஒலிக்கும் மூலமாய் அமைந்துள்ள ஆதி நாதம். இது முன்னர் விளக்கப்பெற்றது. சாதாரண ஒலிக்கும், இங்கே சொல்லப்பட்ட ஒலிக்கும் ஒரு வேறுபாடு உண்டு. அசுத்த மாயா காரியம்