பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii ஆவார். சொல்வதை எழுதுவதோடு மட்டுமல்லாமல் படிகளைத் திருத்தும் பணியையும் திரு. மார்க்கண்டு அவர்களே செய்தார். அவருடைய இலக்கண அறிவு இந் நூலை எழுதுவதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. இவர்கள் இருவருடைய உதவியின்றேல் இந்நூல் வெளிவர வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இந்த இருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் பெரிதும் உரியனவாகும். எழுதி முடித்த பின்னர் ஒவ்வொரு வரியாகப் பார்த்து தடைவிடைகளை எழுப்பி ஒரு முழுவடிவம் பெறுமாறு செய்தவர்கள் முனைவர். மா. ரா. போ. குருசாமி அவர்களும், இதய மருத்துவ நிபுணர் டாக்டர் ந. சிவராசன் அவர்களும், இரயில்வேயில் மின்னியல் தலைமைப் பொறியாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு. C. P. கெளரிசங்கர் அவர்களும் ஆவர். இம்மூவருக்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியன. இவர்கள் ஐவரும் என்மாட்டுக்கொண்ட அன்பினால் இதனைச் செய்தார்கள் என்று கூறுவதைவிட திருவாசகத்தின்பால் அவர்கள் கொண்டுள்ள எல்லையற்ற ஈடுபாடே இதனைச் செய்யுமாறு தூண்டிற்று என்பதே உண்மையாகும். வழக்கம்போல இதனை நன்முறையில் அச்சுக்கோத்துத் தந்த சிவசக்தி கணினி அச்சுக்கோப்பாளர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியன. அழகிய முறையில் முகப்புப்படம் வரைந்து உதவிய ஓவியக் கலைஞர் திரு. மணியம் செல்வன் அவர்களுக்கும், சிறப்பாக நூலை வெளியிட்ட கங்கை புத்தக நிலைய’ உரிமையாளர் திரு. திருநாவு. இராமநாதன் அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள் உரியன. சென்னை-83 அ.ச.ஞானசம்பந்தன் மார்ச், 1999 -