பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 71 ஆகிய இப்பிரபஞ்சத்தில் தோன்றும் எந்த ஒலியும் தோன்றி மறையும் இயல்புடையது. ஆனால், ஆதி நாதம் என்றைக்குமே உள்ளது. அதற்குத் தோற்றமும் இல்லை; மறைவும் இல்லை என்பதைக் குறிப்பதற்காக நின்ற” என்ற சொல்லை அடிகளார் பயன்படுத்துகிறார். - - ஆதி நாத வடிவம் நிலைத்திருப்பது சித்தத்தின் அடித்தளத்தில், பிற புலன்களாலோ, அல்லது அவற்றை உணர்கின்ற மனத்தாலோ இதனை அறிவது இயலாத காரியம், சித்தத்தின் ஆழ்ந்த பகுதியில் உணர வேண்டிய ஒன்றேதவிர வேறு வழியில் அதனைக் காணவோ, அனுபவிக்கவோ முடியாது. அது என்றும் நிலை பெற்றுள்ளது என்பதையும், தம்முடைய கற்பனையில் அல்லது மன மயக்கத்தில் தோன்றியது அன்று என்பதையும் கோடிட்டுக் காட்ட விரும்புபவர்போல ஓங்காரமாய் நின்றவன், சத்திய வடிவினன், அழிவு இல்லாத உண்மை வடிவினன் என்று கூறுகிறார். மெய்யா விமலா, விடைப்பாகா வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்த அகன்ற நுண்ணியனே என்ற அடிகளில் வரும் விடைப்பாகன் என்பது நாம, ரூபம் கடந்த பரம் பொருளுக்குச் சைவ சமயத்தார் கற்பித்துக்கொண்ட வடிவம் ஆகும். அடிகளார் தம்முடைய உள்ளத்தில் ஓங்கார வடிவாய் நின்றவனைப்பற்றி அக நிலையில் இருந்து வேறுபட்டு, புற நிலையில் நின்று சிந்திக்கிறார். ‘அபெளர்ஷேயம் என்று சொல்லப்படுகின்ற வேதம் இறைவனைப்பற்றிக் கூறத்தொடங்கி 'இது அன்று இது அன்று ந இதி = நேதி) என்று எதிர்மறைமுகத்தால் கூறியதேயன்றி உடன்பாட்டு முகத்தால் 'இதுதான் என்று சுட்டிக் கூறமுடியவில்லை என்பது அடிகளார் நினைவிற்கு வருகிறது. வேதம், தன் அளவில் கட்டுப்படாத காரணத்தால் தோன்றிய வியப்பு அடிப்படையில் 'ஐயா என்று அழைக்கின்றது என்று கூறுகிறார்.