பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 திருவாசகம் - சில சிந்தனைகள் அப்படி வேதங்களால் காண முடியாத, அறிய முடியாத அப்பொருளை வேறு வகையில் விளக்க முடியாதா என்று சிந்திக்கிறார் அடிகளார். விஞ்ஞானி ஆதலால், மனித மனத்தின் எல்லைக்குள் அகப்படுகின்ற நான்கு பரிமாணங்களையும் ஒருசேரப் பேசுகிறார். ஓங்கி, ஆழ்ந்து, அகன்று என்று கூறும்போது முப்பரிமாணங்கள் (three dimensions) வெளிப்படுகின்றன. அடுத்து வருகின்ற நுண்ணியனே என்ற சொல் இங்கே பருமைக்கு எதிர்ச் சொல்லாக பயன்படவில்லை. நுண்ணியனே என்று அடிகளார் கூறுவது இந்த மூன்று பரிமாணங்களும் தோன்றி மறைவதற்குக் காரணமாயுள்ள நான்காவது பரிமாணமாகிய காலத் தத்துவத்தையேயாகும். இதுபற்றிப் பின்னர் சற்று விரிவாகக் காணலாம். வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா (36) வெய்யாய் என்பதும் தணியாய் என்பதும் ஒரே பொருளின் இரண்டு மாறுபட்ட இயல்புகளைக் குறிப்பனவாகும். உலகியல்முறையிற் காண்பவர்கள் இவற்றை ஒன்றுக்கொன்று மாறுபட்ட முரண்பாட்டு நிலை என்று கூறுவர். இந்த முரண்பாட்டு நிலை இணைவதில்லை என்பது உலகியற் கருத்து. வெம்மை வேறு; அதன் மறுதலையாய தண்மை வேறு; ஒன்று தோன்றுமிடத்து மற்றொன்று மறைந்துவிடும். ஒளி தோன்றியபோது இருள் மறைந்துவிடுவதுபோல வெம்மை தோன்றியவுடன் தண்மை மறைந்துவிடும். பெளதிக உலகத்தில் இதுதான் இயற்கை, மனித வாழ்க்கையில் ஒளி, இருள் போன்ற புறப் பொருள்களிலேயன்றி அகப்பொருள்களிலும் இதே கருத்தைக் கொண்டுசெல்கின்றனர். அறிவு வளர்ச்சி அடையும்போது அறியாமை நீங்குகிறது என்று கூறுவர். இவ்வாறு முரண்பாடுகளை எடுத்துக் கூறும்போது ஒரு