பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் . 73 சிக்கல் தோன்றத்தான் செய்யும். இரட்டைகள் (த்வைதம்) ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்றும் நாம் அறிவோம். இறைவன் ஒளி வடிவினன் என்றால் இருள் யாருடைய வடிவம்? இறைவன் தண்மையானவன் என்றால் வெம்மை யாரைச் சேர்ந்தது? இந்தப் பிரச்சினைகளுக்கு உலகத்தில் பிற சமயத்தவரால் விடை கூற முடியவில்லை. முன்னர்க் கூறப்பட்டபடி இவை இரண்டுமே இறைவன்தான் என்று சொல்லிய பெருமை சைவம், வைணவம் ஆகிய இரண்டுக்கும் மட்டுமே உரியது. அந்த அடிப்படையில்தான் அடிகளார் இறைவனை ‘வெய்யாய்- தணியாய்” என்று சொல்லுகிறார். 'இயமானன்’ என்பது அட்டமூர்த்தங்களில் எட்டாவதாகக் கொள்ளப்படும் இறைவனுக்குரிய பெயர் ஆகும், வெம்மை தண்மை முதலாயின, பண்புகளே தவிரத் தமக்கெனத் தனித்தன்மை உடையன அல்ல. ஏதாவது ஒரு பொருளைப் பற்றிநிற்கும்போது வெம்மையும், தண்மையும் வெளிப்படுகின்றன. உலகிடை உள்ள எல்லாப் பண்புகளுமே ஒரு பொருளைப் பற்றிநின்றுதான் வெளிப்பட முடியும். நெருப்புக்குச் சூடு குணமாக அமைவதைக் குணா-குண பாவம்' என்று கூறுவர் தர்க்க நூலார். எல்லாவற்றுக்கும் எஜமானனாய்த் தலைமையேற்றிருக்கும் பரம்பொருளுக்கு என்ன குணம் கற்பிப்பது? எல்லாக் குணங்களையும் கடந்தவன் என்பதை என்றோ கண்ட தமிழர்கள் அப்பொருளுக்குக் கடவுள்' என்று பெயரிட்டனர். இந்தச் சொல்லுக்கு ஈடான வேறு ஒரு சொல்லை எந்த மொழியிலும் காண முடியாது. கடவுள் என்ற சொல்லே முரண்பாடுடைய இரண்டு சொற்களின் கூட்டாகும். 'கட' என்றால் நம்முடைய பார்வை, சொல், கற்பனை எல்லாவற்றையும் கடந்து நிற்பது என்பது பொருளாகும். 'உள்' என்றால் முன்னதற்கு நேர்முரணாக கற்பனை, சொல், பார்வை, 6