பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருவாசகம் - சில சிந்தனைகள் எண்ணம் ஆகிய அனைத்திற்கும் உள்ளே ஊடுருவி நிற்பது என்பது பொருளாகும். உலகியலில் வாழும் நாம் எந்த ஒன்றும் எல்லாவற்றையும் கடந்து நிற்க வேண்டும்; அல்லது எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்க வேண்டும் என்ற நினைவிலுள்ளோம். இறைவனைப் பொறுத்தமட்டில் கற்பனை கடந்தவனும் அவன்தான்; உள்ளத்துள் ஓங்காரமாய் நிற்பவனும் அவன்தான் என்பதைக் கூறவந்த நம் முன்னோர் முரண்பாட்டினிடையே முழு முதலைக் கண்டு, மிக அழகாக முரண்பாடோடு கூடிய, கடவுள் என்ற சொல்லையே அப்பொருளுக்குப் பெயராக வைத்தனர். இயமானனாய் நிற்கின்ற அப்பொருள் வெம்மை, தண்மை என்பவற்றைக் கடந்து நிற்பது என்றாலும், அதனை அணைபவர் மனநிலைக்கேற்ப வெம்மையையும், தண்மையையும் தருகின்றது. - தண்மை என்று சொல்வது சரி. வெம்மையை யாரேனும் வேண்டி நிற்பார்களா என்று கேட்கத் தொடங்கினால், அது தவறாகும். பெரும் குளிரில் வாடி நிற்பவன் வெம்மையை விரும்பி நிற்பதுபோலப் பல சமயங்களில் உயிர்கள் வெம்மையை அவாவி நிற்கின்றன. ஒருவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறுகிறது; செயல் அளவில் அது கொடுமையானதுதான். ஆனாலும், பின்னர் நலம் பயக்கின்ற காரணத்தால் அது ஏற்றுக் கொள்ளப் படுகிறது. எனவேதான் வெம்மை, தண்மை என்ற முரண்பட்ட சொற்கள் மூலம் இயமானனை விளக்கத் தொடங்குகிறார் அடிகளார். பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி (37) இறைவன் தம் உள்ளத்துள் வந்து தங்கவேண்டும் என்று மாபெரும் தவங்கள் செய்கின்றவர்களும், நாள் முழுதும் அவனை நினைந்து பாராட்டுகின்றவர்களும் உலகில் உள்ளனர். இறைவன் தன்னுள் வந்து தங்க வேண்டுமென்று இவர்கள் வேண்டுகிறார்களே, அப்படி