பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 திருவாசகம் - சில சிந்தனைகள் 'மிளிர்கின்ற” என்ற அடைமொழியும் அடிகளால் சுடருக்குத் தரப்படுகின்றன. சாதாரணச் சுடரில் திரி வேறு சுடர் வேறாய் இருப்பதுபோலன்றி இறைவன் பற்றுக்கோடில்லாத சுடர் ஆக, மெய்ஞ்ஞானச் சுடராக, மிளிர்கின்ற சுடராக, மெய்ஞ்ஞானச் சொரூபமான கடராக உள்ளான் என்பதை அறிவிக்கவே இத்தனை சொற்களைப் பயன்படுத்துகிறார் அடிகளார். எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே (39) மனித மனத்தின் இயல்பு இரண்டு வகைப்படும். குழந்தை சர்க்கரையால் செய்த பொருளை வாயிலிட்டுச் சப்பிச் சுவைக்கின்றது. அதில் இன்பம் அடைகின்றது. ஆனால், இந்தச் சுவையைத் தருவது எது, எதனால் இன்பம் வருகிறது என்ற விஷயங்கள் குழந்தைக்குத் தெரியாது. என்றாலும், அதைத் சுவைப்பதிலோ, இன்பம் அடைவதிலோ எவ்வித ஐயப்பாடும் இல்லை. வளர்ச்சி அடைந்து நல்ல அறிவு பெற்ற ஒருவன் சர்க்கரையைச் சப்பிச் சுவைக்கின்றபோது குழந்தையைப் போலவே சுவைக்கிறான். இன்பம் அடைகிறான். ஆனால், அவனைப் பொறுத்தமட்டில் சுவையைத் தருவது எது, என்ன காரணத்தால் அது சுவையைத் தருகிறது, அதுவும் அந்தப் பொருள் நாக்கு நுனிப் பகுதியில் படும்போதுதான் சுவை கொடுக்குமே தவிர, அடி நாக்குக்குச் சென்றுவிட்டால் எவ்விதச் சுவையையும் தராது என்பதையெல்லாம் அறிவின் துணைக்கொண்டு அறிந்துகொள்கிறான். இந்த இரண்டு இடங்களிலும் சர்க்கரை இன்பம் தருவது என்னமோ உண்மை. இறையருளை அனுபவிப்பதற்கு, இறைவனுடைய இயல்பு என்ன, அவன் யார், அவனுக்கும் நமக்குமுள்ள தொடர்பு என்ன, அவனை நினைக்கும் போதோ, மனத்தில் இருத்தும்போதோ ஏன் இன்பம் ஏற்படுகிறது, என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகிறவர்கள்