பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருவாசகம் - சில சிந்தனைகள் அகன்று விடுகிறது. அஞ்ஞானத்தை எது போக்கும்? அறிவுதான் போக்கும். அறிவு என்பதை மூன்று விதமாகக் கூறுவர்: கல்வியறிவு, கேள்வி அறிவு, பட்டறிவு (அனுபவ அறிவு. கல்வி கற்று, கேள்வி மூலம் தெளிவு அடைந்து, அதன் பிறகு அனுபவ அறிவைப் பெற்று இறைவனின் இலக்கணங்களை அறிந்து அவனிடத்தில் ஈடுபடுவது தமக்குக் கடமை என்பதை உணர்ந்து இறையனுபவத்தில் மூழ்குதல் ஒருவகை. இவ்வழி மிக நீண்டதும், இடையூறுகள் நிறைந்ததும் ஆகும். இறைவனை அறிவதற்கு எந்தக் கல்வியைத் துணைக்கொண்டோமோ அந்தக் கல்வியே பல சமயங்களில் நமது அகங்காரத்தை வளர்த்து, நம்மை அஞ்ஞானத்தில் அமிழ்த்திவிடுகிறது. இது கருதியே போலும், கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் (திருவாச : திருப்புலம்பல்-3) என்று அடிகளாரும், 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ (தாயு : சித்த-10) என்று தாயுமாணவப் பெருந்தகையும் கூறிச் சென்றனர். ஆக அறிவு, ஞானம் என்பவற்றை முயன்று பெற்று, அதன் பிறகு இறையனுபவம் பெறுவதிலுள்ள இடையூறுகளை ஆராய்ந்த நம் முன்னோர்கள் மற்றொரு சுலபமான வழியைக் கண்டனர். அஞ்ஞானியாகவே இருந்தாலும் ஆழ்ந்த உணர்வோடு இறையிடத்தில் ஈடுபடும் நேரடி அனுபவம் கிடைத்தவுடன் அஞ்ஞானம் நீங்கப்பெறுவது மிக எளிதான காரியமாகும். இறையனுபவம் கிடைத்தவுடன் நல்லறிவு தானாகவே வந்து சேரும். இந்த அறிவும் அதன் முடிவான ஞானம் என்பதும் பரஞானம்’, ‘அபரஞானம்' என்று இருவகைப்படும். அபரஞானம் என்பது உலகியல் அறிவாகும். பரஞானம் என்பது கடந்து நிற்கின்ற இறைவனைப்பற்றி அறிந்து கொள்கிற அறிவாகும். சிவகோசரியார் சாத்திரங்களை மிகுதியாகக் கற்று அதன்வழி நிற்கும் அபரஞானம் உடையவர். எத்தனையோ ஆண்டுகள் காளத்திநாதனை முறை தவறாமல் பூசித்தும்