பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 81 கூட, கண்ணப்பருக்குக் காட்சி அளிக்கும்வரை அவனைக் கண்டார் இல்லை. ஏன்? அவருடைய அபரஞானம் அதற்கு இடையூறாக நின்றது. எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற ஒருவனை இந்த அறிவு, கல்வி முதலியவற்றால் காணமுடியாது. ஆனால் திண்ணனாரைப்(கண்ணப்பரை) பொறுத்தமட்டில் அபரஞானமே இல்லாமல், ஆறு நாளில் பரஞானப் பயன் முழுதும் நிரம்பப் பெற்றார். அதனால், தன்பரிசும் வினைஇரண்டும் சாருமல மூன்றும் அற அன்பு பிழம்பாய்த் திரிவார் (பெ.பு, : கண்ணப்பர்-154) என்று சேக்கிழார் கூறுகிறார். எனவே அறிவு வழியைக் காட்டிலும் இறைவனைக் காண, அடைய அன்பு வழியே சிறந்தது என்று இந்நாட்டார் கருதினர் என்பதை அறிகிறோம். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்ட் பிறகு அடிகளாரின், எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே, அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே என்ற இரண்டு அடிகளையும் எடுத்துப்பார்த்தால் உண்மை விளங்கும். எஞ்ஞானம் இல்லாதேன்’ என்பதன் பொருள், எந்தவிதமான ஞானமும் இல்லாதவன் என்பதாகும். எந்தவிதமான என்றால் பிரபஞ்சம் பற்றிய அபரஞானம், இறைவன் பற்றிய பரஞானம் ஆகிய இரண்டுமே இல்லாதவன் என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார். அப்படி இருந்தும் அவருக்குப் பெருமான் இன்ப வடிவினனாய் உள்ளான் என்றால் இறையனுபவம் பெறுவதற்கு அபரஞானமோ, பரஞான வழியோ தேவை இல்லை என்பது தெளிவாகும். இவ்விரண்டு ஞானமும் இல்லாத திண்ணனார்க்கு, கண்ட விநாடியே குடுமித்தேவர் இன்பப் பொருளானார் என்பது மேலே கூறியதற்குரிய சிறந்த எடுத்துக்காட்டாகும். இவ் இரண்டையும் மறைக்கும் அஞ்ஞானம் மனிதர்களுக்கு இயல்பாக அமைந்த ஒன்றாகும். ஒளியைக் கண்டவுடன்