பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 திருவாசகம் - சில சிந்தனைகள் இருள் மறைவதுபோல அறிவுவிளக்கம் பெற்றவுட்ன் அஞ்ஞானம் மறைகிறது. அகல்விக்கும் நல்லறிவே என்று கூறியமையின் இறைவனையே தூய அறிவு வடிவமானவன் என்று அடிகளார் குறிப்பிடுகிறார். 'அகல்விக்கும் நல்லறிவே என்ற தொடருக்கு மற்றொரு விதமாகவும் பொருள் கூறலாம். கல்வியைக் கற்பதால்மட்டும் அஞ்ஞானம் அகல்வதில்லை. கல்வியைக் கற்பதால் அஞ்ஞானம் அகல்வது உண்மையானால் இந்நாளில், இப்பரந்த உலகில் மாபெரும் கல்விமான் களாகத் திகழ்பவர் பலரும் அஞ்ஞானம் அகன்றவர்களாக இருந்திருத்தல் வேண்டும். ஆனால், இது நடைமுறையில் இல்லை. எனவே அடிகளார் கூறுவதற்கு வேறுபொருள் காண்டல் வேண்டும். அஞ்ஞானம் அகலவேண்டுமாயின் இறையருள் கைகூடினாலொழிய அது நடைபெறாது. இறையருள் சேர்ந்தவுடன் அஞ்ஞானம் தானே கழன்றுவிடுகிறது. அது கழன்ற நிலையில் இறைவன் அறிவே வடிவாய், ஞான சொரூபியாய் விளங்குவதைக் காணமுடியும். இறைவனை அனுபவிக்கக் கூடிய காலத்தில் அதனுடைய பரிமாணம் வெளிப்படுவது இல்லை. சமுத்திரத்துள் மூழ்கிவிட்ட நிலையில் அதன் பரிமாணம் தெரிவதில்லை. பின்னர், புறத்தே வந்து பார்க்கும்போது அதன் பரிமாணம் தெரிகிறது. இன்பப் பொருளாகவும், மெய்ச்சுடராகவும் இருக்கின்றபோது அடிகளார் தம்மை மறந்து, அவனையும் மறந்து, அந்த இன்பத்தில் மூழ்கி விட்டார். அனுபவிக்கப்படும் பொருள், அனுபவம், அனுபவிப்பவன் என்ற மூன்றும் மாறி அனுபவம் ஒன்றே நின்றுவிட்ட நிலையில் இறைவன் அனுபவபூர்வமாகக் காட்சி அளிக்கிறான். மனித மனத்தின் ஓர் இயல்பு என்னவென்றால், எந்த அனுபவத்தில் எவ்வளவு ஈடுபட்டாலும் ஒரொரு சமயம் அதிலிருந்து வெளியே