பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 83 வந்துவிடுவதாகும். அனுபவத்திலிருந்து வெளிப்பட்ட நிலையில், அதாவது மெய்ச்சுடருக்குப் புறத்தே நின்று அடிகளார் காணுகின்றார். அந்த அனுபவம் கிடைப்பதற்கு முன்னர் இந்த மெய்ச்சுடரை அடிகளார் கண்ட நி ை வேறு; அனுபவம் கிடைத்து அதிலிருந்து வெளிப்பட்ட நிலையில் காணுகின்ற காட்சி வேறு. இக்காட்சியின் சிறப்பு என்னவென்றால், அஞ்ஞானம் அகன்ற காட்சி ஆகும் இது. வேறு வகையாகக் கூறுமிடத்து திருவாதவூரர் என்பவர் சாதாரண மனித நிலையில், தேர்ந்த தம் கல்வியறிவின் துணைக்கொண்டு பொருள்களைப் பார்த்த நிலை ஒன்று. திருப்பெருந்துறையில் இறையனுபவம் பெற்றபிறகு அதே பொருள்களைப் பார்க்கின்ற பார்வை வேறு. அஞ்ஞானம் நீங்கிய மெய்ஞ்ஞானக் காட்சியில் அறிவு சொரூபமாகவுள்ள பரம்பொருளைக் காணும்போது வியப்புத் தோன்றுகிறது. ஆகா? எவ்வளவு பெரிய பொருள் இது? இது அளவிட முடியாதது. இது ஒரு நாள் தோன்றி, ஒருநாள் மறைகின்ற பொருள் அன்று. இந்த நினைவு தோன்றவே, ஆக்கம் அளவு இறுதி இல்லாய்” என்கிறார் அடிகளார். இது அவனைச் சுட்டியதாகும். அப்படிச் சுட்டப்பட்ட அறிவுப் பிழம்பாகிய பரம்பொருள் என்ன தொழிலைச் செய்கிறது என்று நினைக்கிறார் அடிகளார். - - - ●拳毒●●●鲁峰-.......... அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய், அழிப்பாய் அருள்தருவாய் (41-42) என்று கூறுவதால் இப்பிரபஞ்சம் முழுவதையும் தோற்றுவித்து, காத்து, அழிக்கின்றதாகிய தொழிலை அப் பரம்பொருள் செய்கிறது. தோற்றுவித்து என்று சொல்லும் போது எந்த ஒரு மூலப்பொருளும் இல்லாமல் இந்தப் பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தது என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது அல்லவா? இந்நாட்டுச் சைவர்,