பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 85 திருப்பெருந்துறையில் அடியார் கூட்டத்தின் நடுவே அமர்ந்திருந்த குருநாதர், அமைச்சர் கோலத்தில் வந்த திருவாதவூரரை அழைத்து ஏதோ செய்தார். பாண்டிய மன்னனின் அமைச்சர் என்ற தோரணையும் திருவாதவூரர் என்ற பெயரும்கூடக் கரைந்துவிட்டன. இதனையே போக்குவாய்' என்றார். அப்படிப் புறப்பொருள் அனைத்தையும் போக்கிநின்ற திருவாதவூரர், அடியார் கூட்டத்தில் ஒருவராகக் குருநாதரால் புகுத்தப்படுவதையே நின்தொழும்பில் புகுவிப்பாய் என்றார். அந்த அடியார்களின் (தொழும்பின்) தலைவராகிய குருநாதர் தம்முடைய பார்வை மூலம் (நயனதிட்சை ஒரு விநாடியில் எதிரே இருக்கின்ற அடியார்களோடு சமத்துவமாகக் கலந்துகொள்ளக்கூடிய தகுதியையும் தந்துவிட்டார் என்பதை அடிகளார் நினைந்து இறும்பூது எய்துகிறார். ஆகவே, அத்தொழும்பில் தம்மைப் புகுவித்தவர் அவர்தான் என்பதை அறிகின்றார். புகவேண்டும் என்ற எண்ணம் தமக்கு இல்லை. தம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அந்த அடியார்களுக்கு இருந்திருக்க முடியாது. அப்படி இருக்க அவர்களில் ஒருவராகத் தாம் ஆனதற்கு ஒரே ஒரு காரணம் குருநாதர் என்பதை நினைந்து நெகிழ்ந்த அடிகளார், புகுவிப்பாய் நின் தொழும்பில்’ என்று பாடுகின்றார். இதுதான் முதலில் நிகழ்ந்த நிகழ்ச்சி. எத்துணை நேரம் இது நீடித்தது என்பதை நாம் அறியோம். இந்த உணர்வு நீடித்தவரை தம்மை மறந்து அந்த இன்ப வாரிதியில் திளைத்த அடிகளார் திடீரென்று வெறுமையை அனுபவிக்கின்றார். இன்பக் கனவிலிருந்து விடுபட்டவன் திடீரென்று வெறுமையை அனுபவிப்பது போல, அடியார்கள் கூட்டத்திடையே தாமும் ஒருவராக இருந்து, தம் குருநாதர் திருவடிகளில் தம்மை மறந்து ஈடுபட்டிருந்த அடிகளார். இப்போது கணப்பொதில் குருநாதர் இல்லை, அவர் திருவடியும் இல்லை, அடியார்