பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 திருவாசகம் - சில சிந்தனைகள் கூட்டமும் இல்லை என்பதை அறிகிறார். திடுக்கிட்ட அடிகளார் ஒரு விநாடி சிந்தித்த பிறகு இதுவும் அவன் செயலே என்று உணர்கின்றார். தம் தொழும்பில் புகுவித்த குருநாதரே அத்தொழும்பிலிருந்து இப்போது தம்மைப் புறத்தே போகவிட்டார் என்பதை உணர்கிறார். தொழும்பில் இருந்து தம்மைப் போக்கியது தம் தகுதி இன்மை காரணத்தாலோ, அன்றி எதனாலோ என்று வருந்திய அடிகளார், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமையை உணரத் தொடங்குகிறார். அதுபற்றி பின்னர் ஆராயலாம். நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே (44) இதுவும் தொழும்பிலிருந்து புறத்தே வந்த பிறகு அடிகளாரின் மனத்தில் தோன்றிய எண்ணமாகும். முன்னர்க் கூறியதுபோல முரண்பாடான சொற்களைக் கொண்டது இவ்வடி நாற்றம் என்பது நறுமணம் என்ற பொருள் உடையது. இந்த நறுமணம் வடிவோ, உருவோ இல்லாதிருப்பினும் ஒரு பொருளைப்பற்றித்தான் நிற்கும் என்பதை நாம் அறிவோம். மலரின் மணம் என்று சொல்வது இந்த அடிப்படையில்தான். அப்படியானால் மணத்திற்குத் தனி இயக்கம் உண்டா? உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். மொக்காக இருக்கும்போது மலரில் மணம் இல்லை. முழுவதும் வீழ்கின்ற நிலையில், மலர்ந்து வீழ்கின்ற நிலையில், மலருக்கு வீ என்ற பெயரும் உண்டு. இதழ் உதிரும்போது அதற்கு மணம் இல்லை. ஆக, இடைப் பருவத்தில் வந்துபோம் இம்மணம் பூவின் இயற்கை உண்மையைக் கூறவேண்டுமானால் மணத்திற்குத் தனி இருப்பு இல்லை. ஒரு குறிப்பிட்ட பருவத்திற்கு முன்னர் அம்மலருள் மறைந்துநின்று, குறிப்பிட்ட காலத்தில் வெளிப்பட்டு, பின்னர் அம் மலரோடு மறைந்துவிடுகின்ற இயல்புடையதே மணம். நாற்றத்தின் நேரியாய்” என்று கூறும்போது இக்