பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைக்ள் 87 கருத்தைத்தான் இங்கே குறிப்பிட்டார். குருநாதராக வந்தவர் அப்படி வருவதற்குமுன் அவர் எங்கே இருந்தார்: அவர் தமக்கு அருள் செய்தபிறகு மறைந்துவிட்டார். இப்போது அவர் எங்கே சென்றார்? ஏனையோரைப் போலத் தோன்றி மறையும் இயல்பு குருநாதராக வந்த சிவத்துக்கு இல்லை. என்றுமுள்ள சிவம், காட்சி, கற்பனை என்பவற்றிற்கு அப்பாற்பட்ட சிவம், இப்பொழுது குருநாதராய் வந்தது. அது மலரில் வெளிப்படும் மணம் போல ஆகும். அதற்கு முன்னர் மலருள் மறைந்து நின்ற மணம்போலத் தம்முடைய காட்சிக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இப்போது மறைந்துவிட்ட நிலையிலும் மலரில் மறைந்த மணம்போல எங்கோ சென்றுவிட்டது. என்றும் உள்ளவனாகிய அவன், நம்முடைய அறிவுக்கும், அனுபவத்திற்கும், உணர்விற்கும், கற்பனைக்கும் அப்பாற் பட்ட ஒரு பொருள் ஆவான்! அப்படிப்பட்டவன் சில நாழிகை நேரம் கண்ணுக்கு விருந்தாய், காட்சி அளிப்பவனாய், திருவடிகளைத் தொட்டு வணங்கும் நிலைக்கு உரியவனாய் குருவடிவில் இருந்ததை நினைக்கின்ற அடிகளாருக்கு மலரில் மணம் வெளிப்படு கின்ற நிலை நினைவுக்கு வருகிறது. ஆகவே, நாற்றத்தின் நேரியாய்’ என்றார். தாம் தொட்டு அனுபவிக்கின்ற நிலையிலிருந்து அவர் திடீரென்று மறைந்துவிட்டதால், 'ஐயா எங்கே போய்விட்டாய்?’ என்று நினைத்து அழும் நிலையில் சேயாய் என்றார். அப்படி நினைக்கும்போதே புறத்தே காட்சி அளித்த அந்தக் குருநாதர், அகத்தே காட்சி அளிக்கிறார். 'சேயாய்' என விளித்தவுடனே, நான் எங்கும் போகவில்லை. உன் உள்ளத்தேதான் இருக்கிறேன். திரும்பிப் பார்’ என்று சொல்வதுபோல ஆழ் மனத்தின் அடியில் காட்சி தருகிறார். அதனால்தான் அடிகளார் நணியானே' என்றார். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)