பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபுராணம் - சிந்தனைகள் 89 கொண்டு முடிந்தாலும் அவன் நம்மைப் பொறுத்தவரை, மறைந்துள்ளானே தவிர இல்லாமற் போய்விடவில்லை என்பதையும் குறிப்பாக உணர்த்த இப்பெயரெச்சம் பயன்படுகிறது. எதிரிலுள்ள பருப்பொருளைக் காண்ப தோடு அல்லாமல், மிக நுண்மையான பொருளையும் ஆராயும் ஆற்றலுடையது மனம், அப்படிப்பட்ட மனத்தாற்கூட எதிரே மறைந்துநிற்கின்ற இறைவனைக் காணவோ, நினைக்கவோ, சிந்திக்கவோ, சொல்லால் விளக்கவோ முடியவில்லை என்ற பொருளும் இந்த அடியில் கிடைப்பதைக் காணலாம். கறந்தபால் கன்னலொடு நெய் கலந்தால் போலச் சிறந்து, அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் (46-48) இவை சற்றுக் கவனத்துடன் ப்ொருள்கொள்ள வேண்டிய அடிகளாகும். இங்கே நாம் கூறப்போகின்ற பொருள் ஒன்றுமட்டுமே சிறந்த பொருள் என்று கூறுவதற்கில்ல்ை. இப்படியும் பொருள் கொள்ளலாம் என்ற கருத்தில் எழுதப்படுவதாகும் இப்பொருள். அப்போது கறக்கப்பட்ட பால், இனிப்புச் சுவையைத் தருகின்ற கன்னல், நெய் என்ற மூன்றும் பேசப்படுகின்றன. நெய், பாலினுள் இருக்கின்ற பொருள் ஆகும். பாலின் ー@}@s@)む」 மிகுதிப் படுத்தவேண்டுமானால் கறந்த பாலோடு கருப்பஞ்சாற்றையும், நெய்யையும் கலந்தால் அந்தச் சுவை மிகுதிப்பட்டு யாவராலும் சுவைக்கப் பெறுகிறது. இந்த உவமையின் மூலம் மற்றொரு கருத்தையும் அடிகளார் விளக்கத் தொடங்குகிறார். "சிறந்த அடியார்’ என்ற இரண்டு சொற்கள் அடியார்களை வகை பிரிக்கின்றன. இறையுணர்வு பெற்றவர்கள் அனைவரும் அடியார்களே. உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அதேநேரத்தில் இறையுணர்வோடு வாழ்கின்ற அடியார்கள் 7