பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்பதை, 'தளிர் அடி மென் மயிலைத் தாது அவிழ்தார்க் காளைக்குக் கலியாணம் செய்தார்கள்’ (பெ.பு:காரை.புரா-1) என்று பாடுகிறார்.

இத்தகைய கணவன் கிடைத்தும் அவனோடு பல காலம் இல்லறம் நடத்தி, இறுதியாக அவன் பிரிந்தபோது தம் உடம்பை நீத்துப் பேய் வடிவு பெற இறைவனை வேண்டிய அம்மையார் சொல்லிய சொற்கள் ‘இவனுக்காகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து... பேய் வடிவு வேண்டும்' (பெ.பு.காரை.புரா-49) என்பதாகும்.

இத்தகைய ஒருவனுடன் பல காலம் இல்லறம் நடத்துவது என்பது புனிதவதியாருக்கு இயன்றதே தவிர ஏனையோர்க்கு இயல்வதன்று.

குளத்தில் நீராட வந்த மகளிர் காரைக்காலம்மையார் வரலாற்றை நன்கு அறிந்திருப்பர்போலும், மனத்தளவில் தம் நிலைமை ஒரு சிறிதும் மாறாது இருந்துகொண்டே, தம் உடம்பைமட்டும் கணவனுக்கு அர்ப்பணிக்கின்ற பேராற்றல் காரைக்கால் அம்மையார்போல் தங்கள்பாலில்லை என்பதை உணர்ந்த அப்பெண்கள், ‘ஐயனே! பழமொழியைக் கூறுவது பொருத்தமில்லை ஆயினும் என்ன நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்தால் உன்னிடம் ஒன்று வேண்டிக்கொள்கின்றோம். தயை கூர்ந்து அதனைக் கேட்பாயாக’ என்று பெரியதொரு முன்னுரையுடன் தங்கள் கருத்தை வெளியிடுகின்றனர்.

அடியாரே கணவராக வேண்டும் என்று கேட்டிருந்தால் போதாதோ? அப்படியிருக்க 'எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க; எம் கை உனக்கு அல்லாது எப்பணியும் செய்யற்க; எம் கண்