பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் : 21


பெரிதும் வருந்துகிறார். அந்தத் திருவடிகளை நினைந்து நினைந்து பலமுறை பேசியுள்ளதை இதற்கு முன்னரும் கண்டோம்.

இப்பாடலிலும் அதே கருத்து மீட்டும் பேசப் பெறுகிறது. 'நாயடியேன் நின் மலர்ப்பாதம் அவை காண்பான் வருந்துவன்’ என்று கூறிய பிறகு, மீட்டும் அத்திருவடிகளைக் காணும் பேறு பெற்றால் தாம் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை இரண்டாவது அடியில் பேசுகின்றார். திருவடிகளைக் காணுகின்ற நேரத்தில் ஒளிக்கும் இச்சோரன் ஓடிவிடாமல் இருக்க 'நாண் மலர்ப் பிணையலின் தாள் தளை இடுமின்' (திருவாச: 3-142,143) என்று முன்னரும் பேசியுள்ளார். இப்பொழுது அத்திருவடிகளைக் 'காணும் பேறு கிடைத்தால் இருந்து மலர் புனைய வேண்டும், நாத்தழும்பேற ஏத்த வேண்டும் என்று தம் உள்ளக்கிடக்கையைப்' பேசுகின்றார்.

திருவடி தரிசனம் கிடைத்தபொழுது 'யானேதும் பிறப்பு அஞ்சேன்' என்று பாடிய அடிகளார், இப்பொழுது திருவடிகள் மறைந்துவிட்டமையின் தாம் தமியராக இருப்பதாக உணருகிறார்.


18.

ஆம் ஆறு உன் திருவடிக்கே அகம்
குழையேன் அன்பு உருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து
உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் துகேன்
மெழுகேன் கூத்து ஆடேன்
சாம் ஆறே விரைகின்றேன்
சதிராலே சார்வானே
14

புத்தேளிர்-தேவர். துகேன்-அலகிடேன். சதிர்-சாமர்த்தியம்

அடிகளார், திருப்பெருந்துறை நாடகம் நடந்து முடிந்த பிறகு முதலில் வருந்தினாரேனும் தாம் எதற்காக உலகிடை