பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/339

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

328 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


சொல்லப்படுவது ‘facts’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் சொல்லிற்கு இணையாகலாம்.

திருச்சதகத்தின் முதல் பத்துப் பாடல்களுக்குத் தரப்பெற்ற மெய்யுணர்தல் என்ற தலைப்பில் வரும் 'மெய்’ என்ற சொல்லுக்கு இது பொருள் அன்று. 'Truth' என்று சொல்லப்படும் உண்மையையே (சத்தியத்தையே) 'மெய்' என்ற சொல்லால் முன்னோர் குறிப்பிட்டனர். இந்த மெய்ம்மை என்றும் பொய்யாவதில்லை; மாறுவதும் இல்லை. இதனை அறிவு கொண்டு ஆராய்வது கடினம். பொருளின் இயல்பு, தன்மை என்பவை பற்றி மட்டுமே அறிவு ஆயமுடியும். எவ்வளவுதான் அறிவின் துணைகொண்டு ஆய்ந்து மெய்ம்மையின் தன்மையையும் இயல்பையும் எடுத்துக் கூறினாலும், அதனை முழுவதுமாக அறிவது இயலாத காரியம். சர்க்கரை என்ற இனிப்புப் பொருளின் தன்மை, இயல்பு என்பவற்றை சேதன வேதியியல் (organic chemistry) மிக நுண்மையாக ஆராய்ந்து ஒரு சமன்பாட்டின் மூலம் எடுத்துக்கூறுகிறது. அறிவின் துணைகொண்டு சர்க்கரையை ஆராய்ந்ததின் முடிவு இது ஆகும். இவ்வாறு செய்வதால் சர்க்கரையின் சுவையை அறிய முடியுமா? சுவையை உணரமுடியுமேதவிர அறிய முடியாது.

மேலே கூறிய விளக்கத்தை மனத்தில் வாங்கிக் கொண்டால், மெய்யறிதல் என்று தலைப்பிடாமல், மெய் உணர்தல் என்று ஏன் நம் முன்னோர்கள் பெயரிட்டனர் என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடியும். Facts என்று சொல்லப்படும் மெய்ம்மையை அறிவது அறிவின் செயல், Truth என்று சொல்லப்படும் மெய்ம்மையை (உண்மையை) அறிய முடியாது; அதனை உணரத்தான் முடியும்.

இந்த நிலையில், ஒன்றை மனத்துள் வாங்கிக்கொள்ள வேண்டும். சர்க்கரையின் சுவையை உணரும் அனுபவத்திற்கு அதன் தன்மையையோ இயல்பையோ