பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 27


கிடைத்தபொழுது திருவாதவூரர் என்ற மனிதர் இந்தப் பரு உடலுடன்தானே இருந்தார்? இந்தப் பரு உடலில் பொருந்திய கண்களால்தானே திருவடிகளைத் தரிசனம் செய்தார்? இறையனுபவத்தில் இந்த உடம்போடு மூழ்கியிருந்த அவர், கண்களைத் திறந்தவுடன் அதிர்ச்சிக்கு உள்ளானார். காரணம், இவர் ஊனக் கண்களால் கண்ட அந்தக் குருவும் அங்கில்லை; அடியவர் கூட்டமும் அங்கில்லை; இவ்வுடம்பினுள் கிடைத்த இறையனுபவமும் இப்பொழுது இல்லை என்பதே ஆகும். இந்த மூன்றும் மறைந்ததற்குரிய காரணத்தை அடிகளார் நினைந்து பார்க்கிறார். தசைப் பொறியாகிய இந்தப் பரு உடல் அடியவர்களுக்கு இல்லை; குருநாதருக்கும் இல்லை. ஆதலால், அவர்கள் உடனே மறைந்துவிட்டனர். அவர் களோடு சேர்ந்து குருநாதரின் சேவடிகளை எப்போதுமே தரிசித்துக்கொண்டிருக்கும் வாய்ப்பை இழந்ததற்கு ஒரே காரணம், தாம் இந்த உடம்புடன் இருப்பதே என்ற முடிவுக்கு வந்துவிட்டார் அடிகளார். ஆதலான் பாழ்த் பிறப்பு அறுத்திட வேண்டும் என விழைகின்றார்.


21.

பரவுவார் இமையோர்கள்
பாடுவன நால்வேதம்
குரவு வார் குழல் மடவாள்
கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின்
அடியார்கள் மேன்மேல் உன்
அரவு வார் கழல் இணைகள்
காண்பாரோ அரியானே
17

குரவு-குராமலர். விரவுவார்-கலப்பார். அரவு வார் கழல் இணைகள்-பாம்பையும் வீரக்கழலையும் அணிந்த திருவடிகள்.

விண்ணுலகில் தேவர்களும் வேதங்களும், மண்ணுலகில் மெய்யடியார்களும் இறைவனுடைய