பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 29



இப்பாடலிலும், மெய்யன்பின் அடியார்கள் காண்பரோ என்று கூறியது அறிவாலும் உணர்வாலும் அவன் இயல்பைக் காணமுடியாது என்றபடி,

'மெய்' அன்பர் என்று அடைகொடுத்துக் கூறிவிட்டு ‘இமையோர்கள்’ ‘நால்வேதம்’ என்ற இரண்டிற்கும் அடைகொடுக்காமல் கூறியமை கருத்துடையதாகும். இமையோர்களுக்கு மெய்யன்பு இல்லை என்பது பண்டுதொட்டே இந்நாட்டார் கண்ட உண்மையாகும். பாடுவன நால்வேதம் என்பதிலும் வேதத்தின் தனித்தன்மை பேசப்பெற்றுள்ளது. வேதத்தின் மந்திரங்கள், சொற்கள் என்பவை ஒலி அளவால் (Phonetic Value) பயன்தருபவையே தவிர அவற்றிற்கு வேறு தனிச்சிறப்பு இல்லை. இறைவனிடத்து அன்பு கொள்ள இந்தச் சொற்கள் உதவி செய்வதில்லை. எனவேதான் 'பாடுவன நால்வேதம்' என்றாரே தவிர அன்போடு பாடுவன என்று கூறவில்லை.


22.

அரியானே யாவர்க்கும்
அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை
ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரை ஆர்ந்த மலர் துவேன்
வியந்து அலறேன் நயந்து உருகேன்
தரியேன் நான் ஆம் ஆறு என்
சாவேன் நான் சாவேனே!
18

அம்பரவா-ஞானாகாசத்தில் விளங்குபவனே. நயந்து-விரும்பி. அறியானே-அறியப்படாதவன்.

இப்பாடலின் முதலடி சூக்குமத்தில் தொடங்கித் தூலத்திற்குச் செல்கின்றது. 'யாவர்க்கும் அரியானே' என்றதற்குப் புறப்பொருள்கள், கருவி, கரணங்கள் ஆகியவற்றின் துணையில்லாமல், அறிவு ஒன்றையே